உயர்கிறது மேட்டூர் அணை நீர் மட்டம்: 2 ஆண்டுகளுக்கு பின் தஞ்சையில் மீண்டும் சம்பா சாகுபடி
சேலம்:
தஞ்சை, திருவாரூர் மாவட்ட நெல் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் ஓரு நாட்களில்திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து நீர்திறக்கப்படவில்லை.
இதனால் சொல்லொண்ணா துயரில் உள்ள தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்ட விவசாயிகள் இந்தநிலையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் திறக்கப்படுமா என்று பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளனர்.
கர்நாடகத்தில் இருந்து நீர் வராவிட்டாலும் கூட மேட்டூர் அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதியில் அவ்வப்போதுபெய்த மழை நீரை அரசு சேமித்து வைத்து வந்தது. நேற்று 70 அடியாக இருந்த நீர் மட்டம் இன்று ஒரு அடிஅதிகரித்து பிற்பகல் 12 மணி நிலவரப்படி 71.46 அடி ஆக உயர்ந்துள்ளது.
தற்போது அணைக்கு வினாடிக்கு 9,052 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
வழக்கமாக 60 அடிக்கு தண்ணீர் இருந்தால் அணை திறக்கப்படும். தற்போது 71 அடி நீர் இருப்பு உள்ளதாலும்,தொடர்ந்து நிலையாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும், ஓரிரு நாட்களில் நெல் பாசனத்திற்காக காவிரியில் நீர்திறக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு சம்பா சாகுபடியைசெய்துவிடலாம் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போதுள்ளநீரைத் திறந்து விட்டால் 20 நாட்களில் அணை காலியாகி விடும் என்ற கவலை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நிலவுவதால் அணை எப்போது திறக்கப்படும் என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications