For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய தலைமை செயலகம்: சென்னை நிறுவனத்தின் டிசைன் தேர்வு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Hindustan Motor Car Factoryஅண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்படவுள்ள புதிய தலைமைச் செயலகத்திற்கு, செனனையைச் சேர்ந்தசி.என்.நாராயண ராவ் என்ஜினியர்ஸ் நிறுவனம் வழங்கிய டிசைன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சென்னையின் மிகப் பிரபலமான கட்டட வடிவமைப்பு நிறுவனம் இது. மறைந்த நாராயண ராவின் புதல்வர்கள்சீனிவாசன் மற்றிம் ராகவேந்திரன் ஆகியோர் தலைமையிலான சிவில் என்ஜினியர்கள் குழு உருவாக்கிய கட்டடடிசைனுக்கு அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.

நாராயண ராவ் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வடிவமைத்துக் கொடுத்த கட்டட மாதிரிகளை சென்னைபெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆராயந்த பின், தமிழக அரசிடம் முன் வைத்தது.

இந்த மாதிரிகள் குறித்து தமிழக அமைச்சரவையும் விவாதித்தது. இறுதியில் நாராயண ராவ் நிறுவன டிசைனைஅமைச்சரவை இறுதி செய்தது.

இந்த நிறுவனம் இதற்கு முன் ஸ்பெசன்ர்ஸ் பிளாசா உள்பட தமிழகத்தின் பல பிரபலமான கட்டடங்களைவடிவமைத்துக் கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அதிமுக ஆட்சியில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்காக நுங்கம்பாக்கத்தில் டென்னிஸ் ஸ்டேடியத்தைமிக வேகமாகக் கட்டித் தந்து முதல்வர் ஜெயலலிதாவின் பாராட்டைப் பெற்றது.

அதே போல பெரியமேட்டில் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தை மிகப் பிரம்மாண்டமாக வடிவமைத்துத் தந்தது.

அடுத்து வந்த திமுக ஆட்சியில் சாப்ட்வேர் பூங்காவான டைடல் பார்க் கட்டடங்களுக்கு இந்த நிறுவனம் வவங்கியடிசைனைத் தான் தேர்வு செய்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. இந்த நிறுவனத்தின் கொடுத்த டிசைனைத்தான் ஹூயூண்டாய் நிறுவனம் கட்டித் தந்தது.

Tidel Parkஇப்போது தலைமைச் செயலக திட்டத்தை வடிவமைப்பதுடன், அதைக் கட்டித் தரும் உரிமையும் நாராயண ராவ்நிறுவனத்துக்கே முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

கிண்டி- கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 43.20 ஏக்கர் நிலப் பரப்பில் இந்த புதிய தலைமைச்செயலகம் கட்டப்படவுள்ளது.

இதற்காக ரூ. 440 கோடி செலவிடப்படும் என்று தெரிகிறது. ஐப்பசி மாதம் தொடங்கியதும் பூமி பூஜைநடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

20 மாதங்களுக்குள் இந்தக் கட்டடத்தை கட்டி முடிக்கு அவகுக்கு காலக் கெடு விதிக்கப்படவுள்ளது. அதிகபட்சமாகமேலும் 2 மாதங்கள் கால நீட்டிப்புத் தரப்படும் என்று தெரிகிறது.

Tidel Park inside view2005ம் ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடித்து, 2006 பொங்கலன்று புதிய தலைமைச் செயலகத்தைத் திறக்க அரசுதிட்டமிட்டுள்ளது.

சென்னை டயோடா, ஹூயூண்டாய், இந்துஸ்தான் மோட்டர்ஸ் ஆகிய கார் தயாரிப்பு தொழிற்சாலைகள், கொச்சின்ஜவஹர்லால் ஸ்டேடியம் உள்பட மிகப் பெரிய கட்டடங்களையும் வடிவமைத்துள்ள நாராயண ராவ் நிறுவனம்.

தலைமைச் செயலகத்தையும் மிக நவீனமாகவும், ஹை-டெக் வசதிகளுடன் கட்டவுள்ளது இந்த நிறுவனம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X