For Daily Alerts
Just In
பலியிட தடையை எதிர்த்து பா.ம.க., மூ.மு.க., ம.த.தே. ஆர்ப்பாட்டம்
சென்னை:
கோவில்களில் ஆடு, கோழிகள் பலியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சிதலைமையில், சமூக நீதிப் பேரவை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
வன்னியர்களின் அமைப்பான பாட்டாளி மக்கள் கட்சி, யாதவ சமூகத்தினருக்காக தொடங்கப்பட்ட மக்கள் தமிழ்தேசம், தேவர் சமூக நலனுக்காக போராடும் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து சமூகநீதிப் பேரவையை உருவாக்கியுள்ளன.
இந்தப் பேரவையின் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் எதிரே ஆடு, கோழி பலியிடவிதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டம் நடந்தது. இதற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.

