பெண்களிடம் காமலீலை: தெலுங்கு வில்லன் நடிகருக்கு சென்னையில் வலைவீச்சு
சென்னை:
திருமணம் செய்து கொள்வதாக கூறி சில இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டுசென்னைக்கு தப்பி வந்துள்ள வில்லன் நடிகரைத் தேடி ஆந்திர போலீஸ் படை சென்னை வந்துள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் குமார் முக்குறுத்தி. தெலுங்குப் படங்களில் வில்லனாகநடித்து வருகிறார்.
இவர் மீது ஜோதி சக்ஸேனா என்ற பெண் ஹைதராபாத் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில் தன்னைக்காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி குமார் மோசடி செய்து விட்டதாக தெரிவித்திருந்தார்.
அதேபோல எலிஸபெத் என்ற பெண்ணும் குமார் மீது புகார் கொடுத்திருந்தார். இவர்களிடம் காமக் களியாட்டம்நடத்திவிட்டு அவர்களை விட்டுவிட்டு தப்பியுள்ளார் குமார். மேலும் இது போல பல பெண்களை இவர்நாசப்படுத்தியுள்ளதாக தகவல் வந்ததால் போலீசார் அவரைக் கைது செய்ய முயனறனர்.
ஆனால், இதை அறிந்த குமார் ஹைதராபாத்தில் இருந்து தப்பி சென்னை வந்து விட்டார். இங்கிருந்துவெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயற்சிப்பதாகவும் ஆந்திர போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஹைதராபாத்தில் இருந்து ஒரு போலீஸ் படை சென்னை வந்துள்ளது.
குமார் வெளிநாட்டுக்குத் தப்பி விடாமல் தடுக்க மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பும்நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
மீனம்பாக்கம் காவல் நிலையத்திலும் குமார் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

