For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெவை விமர்சித்த மணி சங்கர அய்யர் மீது பயங்கர தாக்குதல்: கார், அலுவலகம் சூறை

By Staff
Google Oneindia Tamil News

நாகப்பட்டனம்:

Mani Shankar Ayar

சட்டை கிழிக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர அய்யர்
நாகப்பட்டிணத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற அரசு விழாவில், காவிரி விவகாரம் குறித்துப் பேசியகாங்கிரஸ் எம்.பி. மணி சங்கர அய்யருக்கு ஜெயலலிதா காட்டமான பதில் அளித்தார். இதையடுத்து விழா முடிந்துவீடு திரும்பிக் கொண்டிருந்த மணி சங்கர அய்யரை அதிமுகவினரும் ரெளடிகளும் வழிமறித்து பயங்கர தாக்குதல்நடத்தினர். இதில் அய்யர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அய்யரின் கார் உடைக்கப்பட்டது. அவரது அலுவலகம் ஆகியவை சூறையாடப்பட்டது.

உடன் இருந்த காங்கிரஸ்தொண்டர்கள் மீதும் பயங்கர தாக்குதல் நடந்தது.

கடந்த அதிமுக ஆட்சியில் அதிமுகவை விமர்சிப்பவர்களின் வீட்டுக்கு ஆட்டோவில் ரவுடிகள் வருவதும் அடித்துதுவைப்பதும் வழக்கமாக இருந்தது. ஆனால், இந்த முறை தன்னைக் கண்டித்துப் பேசுபவர்கள் வீட்டில் போலீசாரைவிட்டு ரெய்டு நடத்துவதும், வழக்குப் போடுவதும் வழக்கமாகக் கொண்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இந்நிலையில் இப்போது பழைய பாணிக்கே அதிமுக திரும்பிவிட்டதாகத் தெரிகிறது.

நாகப்பட்டனத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா நேற்று பிற்பகல் நடந்தது. முதல்வர் ஜெயலலிதாகலந்து கொண்டு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார், நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மணி சங்கர அய்யர் பேசுகையில், காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடக அரசுடன் தமிழகமுதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். இப்போது காவிரியில் ஏதோ கொஞ்சம் நீர் வந்துகொண்டுள்ளது. அதை வைத்து சம்பா சாகுபடியை முழுமையாக முடித்துவிட முடியாது. இதனால் கர்நாடகத்திடம்நீரைப் பெற தமிழக அரசு முழு முயற்சி என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் மயிலாடுதுறை தொகுதியை மேம்படுத்துவதற்கு 7 அம்சத் திட்டம் ஒன்றையும் முதல்வருக்குத் தெரிவித்தார்.

அதன் பின்னர் பேசிய ஜெயலலிதா மணிசங்கர அய்யரை மிகவும் கடுமையாக விமர்சித்தார்.

ஜெயலலிதா பேசியதாவது:

சில ஆண்டுகளுக்கு முன்பு மணிசங்கர அய்யர் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில், குருவாயூருக்கு நான் யானைதானம் செய்தது குறித்து விமர்சித்து எழுதியிருந்தார்.

அதில், யானைக்குப் பதில் தன்னையே ஜெயலலிதா தானமாக தந்திருக்கலாம் என்று கூறியிருந்தார். அதேவிமர்சனத்தை இப்போது இந்த மேடையில் செய்யும் துணிச்சல் அவருக்கு இருக்கிறதா?

காவிரிப் பிரச்சினை குறித்து எனக்கு யோசனை கூறுவதை விட அவரது கட்சித் தலைவர் மூலமாக, அவரது கட்சிஆட்சி புரியும் கர்நாடக அரசுக்கு, காவிரி நீரைத் தமிழகத்திற்குத் திறந்து விட உத்தரவிட மணிசங்கர அய்யர்முயற்சித்தால் சந்தோஷப்படுவேன் என்றார் ஜெயலலிதா.

அப்போது அதிமுக தொண்டர்கள் அய்யரை நோக்கி கூச்சலிட்டனர். இதனால் மேடையில் நெளிந்துகொண்டிருந்தார் அய்யர்.

ஜெயலலிதாவின் கடும் விமர்சனத்தால் அப்செட் ஆகிப் போன மணிசங்கர அய்யர் விழா முடிந்ததும் எழுந்துஜெயலலிதாவிடம் சென்று காரசாரமாகப் பேசினார். இதைப் பார்த்த அதிமுகவினர் அய்யரைத் திட்டனர். அதிமுகஎம்.பி. காமராஜ், அய்யரை நோக்கி வந்தார்.

ஆனால், அதிமுகவினரை அமைதியாக இருக்குமாறு ஜெயலலிதா கூறியதையடுத்து அனைவரும் அமைதியாயினர்.இதையடுத்து தனது காரில் ஏறி மயிலாடுதுறை கிளம்பினார் மணி சங்கர அய்யர்.

அவரது கார் காரைக்கால் அருகே நெருங்கியபோது அதிமுக கொடிகளுடன் வந்த சில கார்கள், அய்யரின் காரைதடுத்து நிறுத்தின. பின்னர் காரில் இருந்தவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் வந்து, ஆபாசமாகப் பேசியவண்ணம்அய்யரின் காரை தாக்கினர். அய்யரை வெளியே இழுத்துப் போட்டு நெஞ்சில் குத்தினர். அவரது சட்டையும்கிழித்து எறியப்பட்டது. கிட்டத்தட்ட கொலை முயற்சியே நடந்தது.

கார் கண்ணாடிகளும் உடைத்து நொறுக்கப்பட்டன. நிலைமையை உணர்ந்த அய்யரின் கார் டிரைவர் காரைவேகமாக ஓட்டிச் சென்றார். இந் நிலையில் அதிமுகவினரிடம் அய்யரின் இரு ஆதராவாளர்கள் மாட்டிக்கொண்டனர். அவர்களை அதிமுகவினர் கடுமையாகத் தாக்கினர்.

தன் மீது மேலும் தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சியதால் மணிசங்கர் அய்யர் தற்போது புதுவை மாநிலம்காரைக்காலில் தங்கியுள்ளார். தனது சொந்த ஊரான மயிலாடுதுறை செல்வதைத் தவிர்த்துவிட்டார்.

இந்நிலையில் மயிலாடுதுறையில் அவயம்பாள்புரம் பகுதியில் உள்ள மணிசங்கர அய்யரின் தொகுதிஅலுவலகத்தையும் இரவில் அதிமுக தொண்டர்கள் பயங்கரமாக தாக்கினர். அலுவலகத்தின் கதவு, ஜன்னல்கள்உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அனைத்துப் பொருட்களும்சூறையாடப்பட்டன.

ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் மணிசங்கர அய்யர் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான மணிசங்கர அய்யரின் கார் மற்றும் அலுவலகம்கடுமையாக தாக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து கேள்விப்பட்ட சோனியா காந்தி, மணி சங்கர அய்யருடன் தொலைபேசியில் பேசினார்.

இந்தக் களேபரத்தில் காவிரியில் நீர் கேட்டு போராட்டம் நடத்திய விவசாயிகளின் பிரச்சனைஅமுக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X