விண்ணை அடைந்தார் சீன வீரர்: பூமியை சுற்றிக் கொண்டிருக்கிறார்
பெய்ஜிங்:
|
லாங் மார்ச் ராக்கெட்டில் பொறுத்தப்பட்ட சென்ஸோவ் விண்கலத்தில் அமரும் சீன வீரர் யாங் லெவி.
விண்வெளிக்கு தனது ராக்கெட் மூலம் வீரரைச் செலுத்தியுள்ள உலகின் மூன்றாவது நாடு சீனா தான். ஆசியாவில்முதல் நாடும் சீனா தான்.
யாங் லிவே (வயது 38) என்ற விண்வெளி வீரருடன் சென்ஸோவ் 5 (புனிதக் கலன் 5) என்ற இந்த விண்கலத்தைசீனாவின் லாங் மார்ச் (Long March CZ 2F) ரக ராக்கெட் இன்று விணணில் செலுத்தியது. கோபி பாலைவனப்பகுதியில் உள்ள ஜிகுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்தில் இருந்து இந்த ராக்கெட் இன்று ஏவப்பட்டது.
இதை சீன அதிபர் ஹூ ஜின்டாவ் மற்றும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் நேரில்பார்வையிட்டனர்.
வீரரை விண்ணுக்கு செலுத்திய லாங் மார்ச் ராக்கெட்
இதை சீனத் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை. இந்திய நேரப்படி காலை 6.30மணியளவில் இந்த ராக்கெட் ஏவப்பட்டது.
1999ம் ஆண்டு முதல் விண்வெளிக்கு வீரரை அனுப்புவதில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை 4 முறைஆளில்லா விண்கலத்தை விண்ணுக்குச் செலுத்து அதை பத்திரமாக தரையிறங்கச் செய்தது சீனா. இதைத் தொடர்ந்து இன்று வீரருடன் விண்கலத்தை அனுப்பியுள்ளது. சீனாவின் சென்ஸோவ் விண் கலம் ரஷ்யாவின் சோயூஸ் கேப்சூல் விண்கலத்தைப் போலவே உள்ளது. 8.86 மீட்டர்நீளமும் 7,790 கிலோ எடையும் கொண்ட இந்த விண்கலம், சிறிய ராக்கெட்டுகள் மற்றும் பாராசூட்களைக்கொண்டது. இவற்றைக் கொண்டு இந்தக் கலன் விண்ணிலிருந்து பத்திரமாகத் தரையிறங்கும். |
|
|
வீரர் யாங் லெவியுடன் விண்ணை சுற்றி வரும் சென்ஸோவ் 5 விண்கலம்
அடுத்த சில நிமிடங்களில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்பு கொண்ட யாங் லிவே, தனது உடல்வெப்பம், ரத்த அழுத்தம் ஆகியவை மிக நார்மலாக இருப்பதாகத் தெரிவித்தார். அவருக்கு கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
சென்ஸோவ் விண் கலம் 90 நிமிடத்துக்கு ஒருமுறை பூமியை முழு சுற்று சுற்றி வந்து கொண்டுள்ளது.
மொத்தம் 21மணி நேரம் 14 முறை பூமியைச் சுற்றிய பின் வீரர் யாங் லெவி இந்தக் கலத்தின் மூலம் தரையிறங்கும். |
கலததை விண்ணில் ஏவுவது எளிது. பத்திரமாக தரையிறக்குவது தான் மிகவும் கடினமானது. இதனால் சீன வீரரின்இந்த விண்வெளிப் பயணத்தை உலகமே உற்று கவனித்து வருகிறது.
1961ம் ஆண்டில் ரஷ்யா தான் முதன்முதலில் தனது வீரரை விண்ணுக்கு அனுப்பியது. 1962ல் அமெரிக்க வீரர்விண்வெளிக்குச் சென்றார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பின் சீன வீரர் விண்ணை அடைந்துள்ளார்.
![]() |
சென்ஸோவ் 5 விண்கலத்தின் மாதிரி
விண்கலத்தை வடிவமைப்பதிலும், விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் சீனாவுக்கு ரஷ்யாபெருமளவில் உதவியதாக அமெரிக்கா கூறுகிறது.

