For Daily Alerts
Just In
இருளில் மூழ்கிய கொடைக்கானல் !!
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கன மழை காரணமாக செவ்வாய்க்கிழமை மின்சார வினியோகம் தடைபட்டு அந்த மலைநகரமே முழுவதும் இருளில் மூழ்கியது.
கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் கன மழையுடன், பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மின் வினியோகம் தடைபட்டது. புதன்கிழமை இரவு 7 மணியளவில்தான் மின்சாரவினியோகம் சரி செய்யப்பட்டது. இதனால் சுமார் 36 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவித்துவிட்டதுகொடைக்கானல்.

