இலங்கை-புலிகள் பேச்சுவார்த்தை அடுத்த ஆண்டு மீண்டும் துவக்கம்
கொழும்பு:
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தடைபட்ட பேச்சுவார்த்தைகள் மீண்டும் அடுத்த ஆண்டுதொடங்கும் என்று தெரிகிறது.
பேச்சுவார்த்தைக்கான தேதி. இடம் ஆகியவை குறித்து வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் இரு தரப்பினருக்கும்இடையே ஆலோசனைகள் தொடங்கும் என அந் நாட்டு அமைச்சரும் அரசுத் தரப்பின் அமைதிப் பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவருமான ஜி.எல். பெரிஸ் தெரிவித்தார்.
வட கிழக்குப் பகுதியில் தங்கள் தலைமையில் இடைக்கால நிராவாகத்தை அமைக்க வேண்டும், அதற்கு போதியஅரசியல், நிதிச் சுதந்திரத்தை அமைக்க வேண்டும் என்று கோரி பேச்சுவார்த்தைகளில் இருந்து புலிகள் விலகினர்.
மேலும் பேச்சுவார்த்தைகளின்போது ஒப்புக் கொண்ட எதையுமே அரசு நிறைவேற்ற மறுப்பதாகவும் கூறினர்.இடைக்கால நிர்வாகம் குறித்து திடமான முடிவை அரசு அறிவித்தால் மட்டுமே மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளில்பங்கேற்போம் என்று கூறிவிட்டனர்.
இதனால் தாய்லாந்தில் நடந்த 6 சுற்றுப் பேச்சுக்களிலும் முடிவு ஏதும் எட்டப்படாமல் பாதியிலேயே நின்றுவிட்டது.
இதையடுத்து இடைக்கால நிர்வாகம் அமைப்பது குறித்து இலங்கை அரசு ஒரு வரைவுத் திட்டத்தை உருவாக்கியது.இதை புலிகளிடமும் ஒப்படைத்தது. இப்போது இதில் தாங்கள் விரும்பும் மாற்றங்கள் குறித்து தங்களது சட்டநிபுணர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் புலிகள் ஆலோசித்து வருகின்றனர்.
விரைவில் தங்களது வரைவுத் திட்டத்தை அரசிடம் புலிகள் வழங்க உள்ளனர்.
இந் நிலையில் நாட்டின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட்டு அடுத்த ஆண்டு மீண்டும் பேச்சுவார்த்தைகளைத்துவக்கி விடுவதில் அரசு தீவிரமாக உள்ளது. இதற்கு சில மாதங்கள் பிடிக்கும். அதற்குள் புலிகளின் வரைவுத்திட்டமும் அரசுக்குக் கிடைத்துவிடும் என்று தெரிகிறது.


