நெகிழ வைத்த கலைஞர்: மணிசங்கர அய்யர் உருக்கம்
சென்னை:
![]() |
வன்றைக் கும்பலால் தாக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி. மணி சங்கர அய்யர், திமுக தலைவர் கருணாநிதியை நேரில்சந்தித்துப் பேசினார்.
காரைக்கால் அருகே அதிமுகவினரால் தாக்கப்பட்டார் மணிசங்கர அய்யர். அவரது கார் சேதமடைந்தது.இதையடுத்து அங்கு ஓடி வந்த திமுக தொண்டர்கள், அதிமுகவினரை விரட்டியடித்தாக கருணாநிதிதெரிவித்துள்ளார். இதையடுத்தே அய்யரின் கார் டிரைவரால் அங்கிருந்து வண்டியை நகர்த்திச் செல்லமுடிந்துள்ளது என்றார்.
ஒரு காலத்தில் தீவிர ஜெயலலிதா ஆதரவாளராக இருந்த மணிசங்கர அய்யர் தாக்கப்பட்டது காங்கிரஸாரிடையேபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அய்யர் தாக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதியும் கடும் கண்டனம்தெரிவித்தார்.
இந் நிலையில், மணிசங்கர அய்யர் நேற்று மாலை கருணாநிதியை, அவரது கோபாலபுரம் வீட்டுக்குச் சென்றுசந்தித்தார். அப்போது தான் தாக்கப்பட்டதைக் கண்டித்ததற்கு நன்றி தெவித்துக் கொண்டார்.
சுமார் 15 நிமிட சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திமுகவையும், திமுக தலைவர் கருணாநிதியையும் நான் பல சமயங்களில் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளேன்.ஆனால் கலைஞர் அதை மனதில் வைத்துக் கொள்ளாமல், தாக்குதலை கடுமையாக கண்டித்ததுடன், எனக்குமுழுமையான ஆதரவும் தெரிவித்தார். கலைஞர் என்னை நெகிழச் செய்துவிட்டார் என்றார்.


