For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெவின் ஹெலிகாப்டர் பயணங்கள்: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவே காரணம்

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

பொடா சட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள திருத்தங்களால் அச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கமுடியாது. எனவே தான் அந்த சட்டத்தையே நீக்க வேண்டும் என திமுக கோருகிறது என மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.

திமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஈரோடு வந்த மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியது:

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் அனைவரையும், கட்சிப் பாகுபாடின்றிஉடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அச் சட்டத்தை நீக்கக் கோரி திமுக நடத்தவிருக்கும் மறியல்போராட்டம், திட்டமிட்டபடி டிசம்பர் 1ம் தேதி நடைபெறும்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒடுக்கப்பட்டிருந்த எல்.டி.டி.ஈ. இயக்க நடவடிக்கைகள், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில்தலைதூக்கியதாக ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது. திமுக ஆட்சியில் ராஜீவ் காந்தி 10க்கும்மேற்பட்ட முறை தமிழகத்துக்கு வந்து, பத்தரமாகத் திரும்பிச் சென்றார். அடுத்து ஆளுநர் ஆட்சியின்போது தான்அவர் கொல்லப்பட்டார் .

குறுகிய தூரத்தில் இருக்கும் இடங்களுக்குக் கூட, சாலை வழியில் செல்வதற்குப் பயப்பட்டுக் கொண்டு, ஜெயலலிதாஹெலிகாப்டரில் செல்வது, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதையே காட்டுகிறது என்றும் டி.ஆர். பாலுகூறினார்,

ஏரி மற்றும் நதிகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட 12 திட்டங்களுக்காக தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் தமிழகஅரசு சரியான முறையில் பயன்படுத்த வில்லை என என மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

மேலும் தமிழினம், தமிழ் மொழிக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டால் அதை எதிர்க்க திமுக தயங்காது.தமிழுக்காக அமைச்சர் பதவியைத் துறப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

திமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஈரோடு வந்த மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியது:

தேசிய நதி நீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 3 ஆண்டுக்குள் சென்னையில் உள்ள கூவம், பக்கிங்ஹாம் கால்வாய்ஆகியவற்றை சுத்தம் செய்ய 100 சதவீத மானியத்துடன் மத்திய அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால்தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை. நிதியையும் தமிழக அரசு பயன்படுத்த வில்லை.3 ஆண்டு கெடுவும் முடிந்து விட்டது.

கழிவு நீர் கடலில் கலக்காமல் இருக்கத் திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் கடல் பாதுகாப்பு திட்டத்துக்கு தலா ரூ. 9கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.ஏரி மற்றும் நதிகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட 12 திட்டங்களுக்காக தமிழகத்துக்கு ரூ.1,700 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதில் ரூ. 1,100 கோடி மானியமாக வழங்கப்பட்டது.

மேலும் ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நதி நீர்ப் பாதுகாப்புத் திட்டத்துக்காக ரூ. 3,300 கோடிஒதுக்கப்பட்டது. அதில் மூன்றில் ஒரு பங்கு தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டது.

ஆனால், ஒதுக்கப்பட்ட நிதியை தமிழக அரசு உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வில்லை. மற்ற மாநிலஅரசுகள் இத்திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி வரும் நிலையில் தமிழக அரசு ரூ.180 கோடியை மட்டுமேபயன் படுத்தியுள்ளது.

நான் பொறுப்பேற்ற பின் சுற்றுச்சூழல் பணிகளுக்காக அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது. என் தொகுதிக்குள்நடக்கும் அரசு விழாக்களுக்கு தமிழக அரசு எனக்கு அழைப்பு விடுப்பதில்லை. என்னைத் தொந்தரவு செய்யவேண்டாம் என நினைத்திருக்கலாம்.

புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு திமுக எதிராக இருந்தாலும், என்னுடைய தொகுதிக்குள் புதிய கட்டிடம்அமைவது எனக்கு மகிழ்ச்சியே. தமிழகத்துக்கு எதிராக, தமிழினம், மொழிக்கு எதிராக மத்திய அரசின்ஆட்சிப்பணி நடந்தால் அதை எதிர்க்கத் தயங்க மாட்டோம். தமிழினத்தைக் காக்க அமைச்சர் பதவி தடையாகஇருந்தால் அதையும் துறக்கத் தயாராக இருக்கிறோம்.

பொடா சட்டத்தில் கொண்டு வரப்படுவதாகக் கூறப்படும் திருத்தங்கள், அச் சட்டம் தவறாகப்பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் இல்லாததால் தான், தி.மு.க அச் சட்டத்தை நீக்க கோருகிறது.

அச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் அனைவரையும், கட்சிப் பாகுபாடின்றிஉடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அச் சட்டத்தை நீக்கக் கோரி தி.மு.க. நடத்தவிருக்கும் மறியல்போராட்டம், திட்டமிட்டபடி டிசம்பர் 1ம் தேதி நடைபெறும்.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஒடுக்கப்பட்டிருந்த எல்.டி.டி.ஈ. இயக்க நடவடிக்கைகள், கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தலைதூக்கியதாக ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது.

தி.மு.க. ஆட்சியில் ராஜீவ் காந்தி 10க்கும் மேற்பட்ட முறை தமிழகம் வந்து, பத்தரமாகத் திரும்பியிருப்பதையும்,ஆளுநர் ஆளும்போதுதான் அவர் கொல்லப்பட்டார் .

குறுகிய தூரத்தில் இருக்கும் இடங்களுக்குக் கூட, சாலை வழியில் செல்வதற்குப் பயப்பட்டுக் கொண்டு, ஜெயலலிதாஹெலிகாப்டரில் செல்வது, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதையேக் காட்டுகிறது என்றும் டி.ஆர்.பாலு கூறினார்,

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X