For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெங்கு காய்ச்சலுக்கு ஒரு குழந்தை உட்பட இருவர் பலி !

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

லேட்டாக தொடங்கினாலும், பயங்கர மழை இருக்கும் என்று கூறப்பட்ட வட கிழக்குப் பருவ மழை காணாமல்போய் விட்டது. தமிழகமெங்கும் வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. மக்கள் ஏமாற்றத்தில் மூழ்கியுள்ளனர்.

உயிரையே எடுக்கும் டெங்குக் காய்ச்சல் டெல்லி உட்பட வட மாநிலங்களில் பரவி வருகிறது. இக்காய்ச்சல் வந்தஉடனேயே கண்டு பிடித்து முறையான சிகிச்சை அளித்தால் உயிரைக்காப்பாற்ற முடியும். கவனக்குறைவாகஇருந்தால் அது உயிரையே பறித்து விடும்.

காய்ச்சலின் அறிகுறிகளாக முதலில் காய்ச்சல் இருக்கும். தலைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்படும்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் காய்ச்சலை குணப்படுத்திவிடலாம். 2,3 நாள் தாமதப்படுத்தினாலும் அது உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும்.

இந்தியா முழுவதும் இந்தக் காய்ச்சல் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியிலும் தினம் தினம்காய்ச்சலின் அறிகுறிகளுடன் பலர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

திருச்சியின் எல்லா மருத்துவமனைகளும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகின்றன. இந் நிலையில்அங்கு ஒரு குழந்தை உட்பட இருவர் டெங்குக்காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.

கடந்த சில நாட்களாக டெங்குக்காய்ச்சலால் சிரமப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு பெண்குழந்தைசில மணிநேரங்களிலேயே இறந்து விட்டது. அக்குழந்தையின் ரத்தத்தை சோதித்துப் பார்த்ததில் அதுடெங்குக்காய்ச்சலால் பலியானது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது ஆண் ஒருவரும் டெங்குக்காய்ச்சலால் அவதிப்பட்டு பின்மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னும் உயிரிழந்தார். ரத்தப்பரிசோதனையில் அவரும் டெங்குக்காய்ச்சலால் இறந்திருப்பது தெரிய வந்தது.இந்த இறப்புகளால் மாவட்ட மக்கள் கடும் அதிர்ச்சிக்குஆளாகியுள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி பொது சுகாதார அலுவலர் டாக்டர் அகிலா கூறியதாவது:

எங்கள் மருத்துவ குழுவினர் திருச்சி மாநகரம் முழுக்க டெங்குக் காய்ச்சல் இருக்கிறதா என்று கண்டறிந்துசிகிச்சைக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும்தற்போது இறந்தவர்களது எண்ணிக்கை 53 ஆக உள்ளது.

இந்த 53 பேருக்கும் தொடர்ந்து காய்ச்சல் இருந்தது. ரத்தப்பரிசோதனையில் இவர்களுக்கு டெங்கு இருப்பதற்கானஅறிகுறிகள் இல்லை என தெரிய வந்தது.

ஆனால் டெங்குக் காய்ச்சலால் இறந்த அந்தக் குழந்தையும், பெரியவரும் காய்ச்சல் வந்தவுடன் மருத்துவமனைக்குவராமல் சில நாட்கள் கழித்து வந்ததால் உயிரிழந்தனர்.

அனைத்து மருத்துவமனைகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரைகள் கொடுத்து முதல் கட்டமாக காய்ச்சல்குணப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அகிலா கூறினார்.

இதற்கிடையில் திருச்சியில் நடந்த டெங்குக்காய்ச்சல் தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கமிஷனர்சிவராமன், டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் அருகில் வசிக்கும்மற்றவர்களுக்கு ரத்தப்பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வீட்டைச் சுற்றித் தண்ணீர்தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும், காய்ச்சல் வந்தால் உடனடியாகமருத்துவமனைக்கு வந்து விட வேண்டும் என்றும் கூறினார்.

திருச்சி பொதுச் சுகாதாரத் துறை இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

டெங்குக் காய்ச்சல் பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். பொதுமக்கள் வீட்டருகே தண்ணீர்தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேங்காய் மூடி, டயர் இவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இவற்றிலிருந்துதான் டெங்குக் காய்ச்சலை உண்டாக்கும் கொசு பரவுகிறது.

திருச்சியில் இதுவரை 60 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இவர்களது இரத்தம் பரிசோதனைக்காக ஓசூருக்கு அனுப்பப்பட்டு, பரிசோதனையும்நடந்து வருகிறது. எனவே காய்ச்சல் வரும் நோயாளிகளுக்கு முதல் கட்ட சிகிச்சைக்குப் பின்ரத்தப்பரிசோதனையும் செய்கிறோம்.திருச்சி மாவட்டத்தில் இருந்து கடந்த 4,5 நாட்களாக ஓசூர் பரிசோதனைக்கூடத்துக்கு காய்ச்சலால்பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தை அனுப்பி வைக்கிறோம்.

காய்ச்சல் என்று வருபவர்களுக்கு முதலில் கொடுக்கும் மாத்திரையிலேயே குணமாகி விடுகிறது. திருச்சியில் டெங்குகாய்ச்சல் பரவாமல் இருக்க மருத்துவ மருத்துவ குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்காககாய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X