For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கணவன்-மனைவியை மீண்டும் இணைத்து வைத்த நீதிபதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Sangeetha with his husband Rajavel

நீதிபதியின் உத்தரவுப்படி மீண்டும் பதிவுத் திருமணம் செய்து கொண்ட ராஜவேல்-சங்கீதா
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கற்பக விநாயகத்தின் உத்தரவுப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்தின் மகன் ராஜவேலும் அவரதுமனைவி சங்கீதாவும்.

தன்னிடம் மாமனர் ராமலிங்கம் தவறாக நடந்து கொள்ள முயல்வதாக சங்கீதா வழக்குத் தொடர்ந்தார்.

அமெரிக்காவில் வசித்து வரும் கணவர் ராஜவேலும் இதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதாகக் கூறியிருந்தார்.

இதனால் துணைவேந்தர் குடும்பத்தோடு கைதாகும் சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முன் ஜாமீன் கோரிசேதுபதி ராமலிங்கத்தின் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

இந்த மனுவை விசாத்த நீதிபதி கற்பக விநாயகம் துணைவேந்தர் குடும்பத்தை கடுமையாக எச்சரித்தார். அவரதுமகன் ராஜவேலும் உடனடியாக அமெரிக்காவில் இருந்து சென்னை வர வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.அவரும் வந்து சேர்ந்தார்.

பின்னர் சங்கீதாவையும் ராஜவேலுவையும் அழைத்து அறிவுரை கூறிய நீதிபதி, இருவரும் சேர்ந்து வாழ வேண்டும்.குடும்பம் பிரியக் கூடாது. சங்கீதாவுக்கு இனியும் உங்கள் தந்தையால் தொல்லை வரக் கூடாது எனஅறிவுறுத்தினார்.

மீறினால் கடும் தண்டனை தரவும் தயங்க மாட்டேன் என நீதிபதி எச்சரித்தார்.

இதையடுத்து நீதிபதியின் அறிவுரையின்படி ராஜவேலுவும் சங்கீதாவும் தனியே சென்னையில் ஹோட்டலில்தங்கினர். இருவரும் மனம் விட்டுப் பேசும்படியும், கணவன்- மனைவி இடைலே நீங்கள் தலையிடக் கூடாதுஎனவும் துணைவேந்தருக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து கணவனும் மனைவியும் இரு நாட்கள் குடும்பத்தாரைவிட்டு தனியே தங்கி இருந்துவிட்டு வந்துநீதிபதிக்கு நன்றி தெரிவித்தனர். தங்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்த்துக் கொண்டதாகவும்,இனி சங்கீதாவை அமெரிக்காவுக்கே அழைத்துச் சென்று தன்னுடன் வைத்துக் கொள்ளப் போவதாகவும் ராஜவேல்கூறினார்.

Judge Karpaga Vinayagamஇதையடுத்து பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் இருவரையும் முறைப்படி பதிவுத் திருமணம் செய்துகொள்ளவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

அதன்படி நேற்று முன் தினம் வடபழனி கோவிலில் வைத்து சங்கீதாவுக்கு மீண்டும் தாலி கட்டினார் ராஜவேல்.இந்தத் திருமணம் முறைப்படி பதிவும் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் கணவனும், மனைவியும் ஆஜராயினர். அப்போது அவர்களிடம்,இப்போது போலவே எப்போதும் சந்தோஷமாக வாழ வேண்டும்.

என்னைச் சந்தித்த ராஜவேல், இனி மனைவி சொல்லே மந்திரம் என்றார். அதே போல கணவரின் சொல்படிசங்கீதாவும் நடந்து கொள்ள வேண்டும். உங்கள் பிரச்சனைகளை நீங்கள் இருவரும் பேசித் தான் தீர்த்துக் கொள்ளவேண்டும். இதில் மூன்றாம் நபருக்கு இடமே தராதீர்கள்.

இருவரும் புதிதாய் மீண்டும் மணம் முடித்து வந்திருக்கிறீர்கள். பெற்றோரிடம் ஆசி வாங்கினீர்களா? என்றார்.அவர்கள் இல்லை என்று சொல்ல, உடனே அங்கிருந்த இருவரின் பெற்றோரையும் அழைத்த நீதிபதி, தம்பதியரைஅவர்கள் காலில் விழுந்து ஆசி பெறச் சொன்னார்.

இருவரும் ஆசி பெற்றனர். இதையடுத்து முன்னாள் துணை வேந்தரிடம் பேசிய நீதிபதி, நடந்த அனைத்தையும்மறந்துவிடுங்கள். இனி நடப்பது நல்லதாகவே இருக்கட்டும். இவர்களைப் பிரிக்க யாரும் முயற்சிக்கக் கூடாதுஎன்றார்.

பின்னர் ராஜவேல், சங்கீதாவிடம் பேசிய நீதிபதி, அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைஎழுத்துப் பூர்வமாக நீதிமன்றத்திடம் தெரிவியுங்கள். அதுவரை வழக்கை திங்கள்கிழமைக்கும் ஒத்தி வைக்கிறேன்என்றார்.

பிரிய இருந்த ஒரு குடும்பத்தை தனது மனிதாபிமான, திறமையான நடவடிக்கைகளால் ஒன்று சேர்த்துவைத்திருக்கிறார் நீதியரசர் கற்பகவிநாயகம். அவருக்கு காஞ்சி மடத்தில் இருந்து வாழ்த்தும் பாராட்டும்வழங்கப்பட்டுள்ளது.

இதைப் போல பல வழக்குகளிலும் இவர் குடும்பங்களை ஒன்று சேர்த்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தலித் பெண்ணை பஞ்ாசயத்தார் மண்டியிட வைத்து கொடுமைப்படுத்தியபோது, ஒட்டுமொத்த பஞ்சாயத்துகும்பலையும் தமிழகத்தை விட்டே வெளியேற்றுவேன் என்று எச்சரித்து அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்கவைத்தவர் நீதிபதி கற்பக விநாயகம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X