கருணாநிதியுடன் அர்ஜூன் சிங், குலாம்நபி ஆசாத் தொலைபேசியில் பேச்சு
சென்னை:
சோனியா காந்தியின் உத்தரவின்பேரில் திமுக தலைவர் கருணாநிதியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியுள்ளனர்.
இந்திராவின் வலது கரமாய் இருந்தவரான பிரனாப் முகர்ஜி, ராஜிவுக்கு மிக நெருக்கமாக இருந்த குலாம் நபிஆசாத் மற்றும் சோனியாவின் மிக நம்பிக்கைகுரிய அர்ஜூன் சிங் ஆகியோர் கருணாநிதியுடன் போனில் தொடர்புகொண்டு பேசியதாக தகவல்கள் வருகின்றன.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் சேர காங்கிரஸ் தயார் என்றும் நாடாளுமன்றத் தேர்தலில்இணைந்து போட்டியிடலாம் எனவும் அவர்கள் ஆர்வம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மிக விரைவில் சோனியாவே நேரடியாக கருணாநிதியுடன் பேசுவார் என்று தெரிகிறது. காங்கிரஸ், திமுக இடையேகூட்டணியை உருவாக்க கம்யூனிஸ்ட் கட்சிகளும் தீவிரமாக இறங்குவது என முடிவு செய்துள்ளன.
இதற்கிடையே டெல்லியில் ரேடியோவுக்கு பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு அளித்துள்ள பேட்டியில்,அதிமுகவுடனான கூட்டணிக்குத் தயார் என மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். அதே கருத்தையே பொதுச்செயலாளர் இல.கணேசனும் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் எதிரொலித்துள்ளார்.
இந் நிலையில் வரும் ஏப்ரலில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மே மாதத்திலேயே தேர்தலை சந்தித்துவிடபா.ஜ.க. முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications