பிரசாரத்தை தொடங்குகிறார்கள் கம்யூனிஸ்டுகள்
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை முன் கூட்டியே தொடங்க கம்யூனிஸ்ட் கட்சியினர் முடிவுசெய்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் சந்தித்துப்பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இம் மாதம் 26ம் தேதி குடியரசு தினத்தன்று எங்களதுதேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளோம். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளைமக்களிடம் விளக்குவோம்.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படும்.மொத்தம் 2,000 தெரு முனைப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும்.
எங்களைப் போலவே திமுகவும் முன் கூட்டியே பிரசாரத்தைத் தொடங்குமாறு கருணாநிதியிடம் ஆலோசனைதெரிவித்துள்ளோம் என்றார்.
இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வருகிற 18ம் தேதி முதல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளது.அன்றைய தினம் ப.ஜீவானந்தம் நினைவு தினம்,திருப்பூர் குமரன் நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் தினத்தைகொண்டாட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. அந்தக் கூட்டத்தையே பிரசார தொடக்கமாக அக்கட்சி அறிவித்துள்ளது.
கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு கூறுகையில், மாநிலம் முழுவதிலும் 100 இடங்களில் கூட்டங்கள் நடத்தமுடிவு செய்துள்ளோம் என்றார்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications