For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் ஸ்பெஷல் ரயில்வே பட்ஜெட் தாக்கல்: கட்டண உயர்வு இல்லை; மதுரை- டெல்லி புதிய ரயில்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மதுரையில் இருந்து டெல்லிக்கு ஒரு புதிய அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதே போலமொபைல் போன்கள் மூலம் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதைத் தவிரஎல்லா ரயில்களிலும் இனி தக்கல் முறையில் டிக்கெட் பெறும் வசதியும் கொண்டு வரப்படவுள்ளது.

இன்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே இடைக்கால பட்ஜெட்டில் இந்த அறிவிப்புகளை மத்திய அரசுவெளியிட்டது.

எதிர்க் கட்சிகளின் கடுமையான கூச்சல்- குழப்பத்துக்கு இடையே, மக்களைவையில் இன்று ரயில்வே இடைக்காலபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் வருவதையொட்டி பட்ஜெட்டில் ரயில் கட்டணத்தை மத்திய அரசுஉயர்த்தவில்லை.

மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுவதையொட்டி, மக்களவை சிறப்புக் கூட்டத் தொடர் நேற்றுதொடங்கியது. தேர்தல் நடைபெறும் காலம் வரை, அரசுக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கான இடைகாலபட்ஜெட், ரயில்வே பட்ஜெட் ஆகியவை இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படுகின்றன.

கூட்டத் தொடரில் முதல் நாளில் மறைந்த எம்.பிக்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், அவைஒத்திவைக்கப்பட்டது. இன்று அவை கூடியதும் மத்திய அரசுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும்வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து மத்திய ரயில்வே அமைச்சர் நிதீஷ்குமார் ரயில்வேக்கான இடைக்காலபட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதன் விவரம்:

*ரயில் கட்டணமோ, சரக்குக் கட்டணமோ உயர்த்தப்படாது.

*சில மாநிலத் தலைநகர்கள் மற்றும் முக்கிய நகர்களில் இருந்து தலைநகர் டெல்லிக்கு ரூ. 13,425 கோடியில் 17புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் (சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ்) விடப்படும். முதல் ரயில் பெங்களூர் யஷ்வந்த்பூர் ரயில்நிலையத்தில் இருந்து வரும் பிப்ரவரி 8ம் தேதி இயக்கி வைக்கப்படும்.

அதே போல மதுரையிலிருந்தும் டெல்லி நிஜாமுதீனுக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும். இந்த ரயில்கள்குறிப்பிட்ட ஸ்டேஷன்களில் மட்டுமே நிற்கும், ரயிலிலேயே பொது அறிவிப்புகள் செய்ய மைக்குகள்பொறுத்தப்படும்.

* மொபைல் போன்கள் மூலம் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும். சதாப்தி, ஜனசதாப்தி, ராஜதானி ரயில்களின் புறப்படும் நேரம் தாமதமானால் அதை செல்போன்களில் எஸ்.எம்.எஸ். மூலம்அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இத் திட்டம் டெல்லியில் அறிமுகப்படுத்தப்படும்.

* ராஜ்தானி, சதாப்தி, ஜன சதாப்தி ரயில்களில் முதல் ஏ.சி, இரண்டாவது ஏ.சி, சேர் கார்களில் அடிக்கடி பயணம்செய்வோருக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்.

* இனி அனைத்து ரயில்களிலும் தத்கல் முறையில் டிக்கெட்களை முன் பதிவு செய்து கொள்ளலாம். இப்போதுகுறிப்பிட்ட சில ரயில்களில் அதுவும் ஸ்லீப்பர் கிளாசுக்கு மட்டுமே இந்த வசதி இருந்து வருகிறது. இந்த வசதிஅனைத்து ரயில்களுக்கும், வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

*இன்டர்நெட்டில் சதாப்தி ரயிலுக்கு முன் பதிவு செய்யும்போது, நேரடியாக டிக்கெட்டையே டெளன்லோட் செய்துபிரிண்ட் எடுத்துக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படும். இதனால் கூரியர் மூலம் டிக்கெட் வந்து சேரும் காலதாமதத்தைத் தவிர்க்க முடியும்.

*நாட்டின் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு ரயில்கள் விடவும், ரயில் நிலையங்கள் அமைக்கவும் ரூ. 20,000கோடி ஒதுக்கப்படும். இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குகட்டுமான வேலைகள் தந்து வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

*ரயில்களில் பயணிகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க ரயில்வே போலீஸ் படை புதிய திட்டம் வகுத்துள்ளது. வரும்ஜூலை 1 முதல் ரயில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் (சமீபத்தில் பிரதமர் வாஜ்பாயின் பேரன் உத்தரப்பிரதேசத்தில் ஓடும் ரயில் இருந்து தூக்கி வீசப்பட்டு கொலை செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது)

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

வரும் 3ம் தேதி அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. 6ம் தேதி மக்களவைகலைக்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X