ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தியது உயர் நீதிமன்றம்: வெளியே வருகிறார் வைகோ
சென்னை:
பூந்தமல்லி பொடா நீதிமன்றம் விதித்த மிகக் கடுமையான நிபந்தனைகளை சென்னை உயர் நீதிமன்றம் தளர்த்திஉத்தரவிட்டுள்ளது.
நேற்று அவருக்கு ஜாமீன் வழங்க முன் வந்த பொடா நீதிமன்றம் சென்னையை விட்டு எங்கும் போகக் கூடாது,தினசரி பொடா நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், பத்திரிக்கைகள், டிவிக்கு பேட்டி தரக் கூடாதுஎன்பது உள்ளிட்ட 13 கடுமையான நிபந்தனைகளை விதித்தது.
இந்த நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில்இன்று காலை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதி சிர்புர்கர் மற்றும் நீதிபதிஇப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பிற்பகலில் விசாரித்தது.
விசாரணை முடிவில், வைகோவுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டனர். அவர்கள்வெளியிட்ட தீர்ப்பில்,
வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படாத வகையில் வைகோ வெளியூர் செல்லலாம். அவ்வாறு செல்லும்போது,வழக்கு விசாரணை அதிகாரியிடம் எங்கே போகிறார் என்பதை மட்டும் முறைப்படி தெரிவித்தால் போதும்.விடுமுறை நாட்களில் சிட்டி கோர்ட்டில் ஆஜராகத் தேவையில்லை. பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவும்அவருக்கு எந்தத் தடையும் இல்லை என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
மேலும் ஜாமீன் நிபந்தனைகளை ஏற்று நடப்பதாக அபிடவிட் (பிரமாணப் பத்திரம்) எதையும் வைகோ தாக்கல்செய்ய வேண்டியதில்லை. நிபந்தனைகளை ஏற்பதாக நீதிமன்றத்தில் உறுதிமொழி தந்தாலே போதும் என்றனர்.
நேற்று பொடா நீதிமன்றம் மிகக் கடுமையான நிபந்தனைகள் விதித்தால் அவற்றை ஏற்க வைகோ மறுத்துவிட்டார்.இதையடுத்து ஜாமீன் வழக்கில் இன்று பிற்பகலில் தீர்ப்பை அறிவிப்பதாக பொடா நீதிபதி ராஜேந்திரன்தெரிவித்திருந்தார்.
இப்போது அவரது நிபந்தனைகளை உயர் நீதிமன்றம் தளர்த்திவிட்டதால் ஜாமீனில் வைகோ வெளியே வருவார்என்று தெரிகிறது.
முன்னதாக இன்று காலை வைகோ சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்த அவரதுவழக்கறிஞர் நன்மாறன் நிருபர்களிடம் கூறுகையில், ஜாமீன் தரப்படும்போது நிபந்தனைகள் விதிக்கப்படுவதுவழக்கம் தான். ஆனால், வைகோ விஷயத்தில் நிபந்தனைகள் மிகக் கடுமையாக உள்ளன. இந்த நிபந்தனைகளால்அவரது அரசியல் பணிகளே முழுவதுமாக முடங்கிவிடும் அபாயம் உள்ளது. எனவே, இவற்றைத் தளர்த்தக் கோரிமனு தாக்கல் செய்தோம் என்றார்.
பொடா குழுவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி
இதற்கிடையே, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் மீதான வழக்குகளைபொடா மறு ஆய்வுக் குழு விசாரிக்க அதிகாரம் உண்டு என்றும் பொடா மறு ஆய்வுக் குழு இந்த வழக்குகளைதொடர்ந்து ஆய்வு செய்யலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
இவர்கள் மீதான வழக்குகளை மறு ஆய்வு செய்ய பொடா ஆய்வுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று கூறிசென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஜக்காரியா உசேன் ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச்,
வைகோ, கோபால் உள்ளிட்டவர்களின் வழக்குகளை மறு பரிசீலனை செய்ய பொடா மறு ஆய்வுக் குழுவுக்குஅதிகாரம் உள்ளது. எனவே இந்த வழக்கை பொடா மறு ஆய்வுக் குழு தொடர்ந். ஆனால், வழக்கை வாபஸ் பெறவேண்டும் என பொடா மறு ஆய்வுக் குழு கருதினால் அதை மாநில அரசுக்கு பரிந்துரை செய்யலாம்.
ஆனால், இதில் இறுதி முடிவெடுக்க வேண்டியது பொடா நீதிமன்றம் தான் என்றும் நீதிபதிகள் கருத்துதெரிவித்தனர்.



திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!