For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நக்கீரன் நிருபரை கடத்திய தமிழக போலீஸ்: கேரளத்தில் அட்டூழியம்

By Staff
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்திற்குச் சுற்றுலா சென்றிருந்த நக்கீரன் வார இதழின் நாமக்கல் மாவட்ட நிருபர் சுப்பு என்ற சுப்பிரமணியம், தமிழகபோலீஸாரால் அதிரடியாகக் கடத்தப்பட்டார். திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த அவரை கேரள போலீசாரிடம் தெரிவிக்காமலேயேதமிழக போலீசார் தூக்கி வந்தது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடிப்படையின் உளவாளியான தங்கவேலு என்பவரை 1998ம் ஆண்டு வீரப்பன் கடத்திக் கொலை செய்த வழக்கில்சுப்பிரமணியத்தையும் சேர்த்துள்ள தமிழக போலீசார் இந்த அடாவடியைச் செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்ட நிருபரான சுப்பு தனது மனைவி ராதா மற்றும் குழந்தையுடன் திருவனந்தபுரத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார்.நேற்றிரவு தான் தங்கியிருந்த கேரள மாநில சுற்றுலா விடுதிக்கு அருகே இருந்த கடையில் டீ சாப்பிட்டு விட்டு விடுதிக்குத்திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று அங்கு வந்த டாடா சுமோ கார் ஒன்று சுப்புவை வழி மறித்தது. அதிலிருந்து இறங்கிய வாட்டசாட்டாமானஆசாமிகள் சுப்புவை இழுத்து காரில் போட்டுக் கொண்டு பறந்தனர்.

இதைப் பார்த்த அங்கு நின்றிருந்த சில ஆட்டோ டிரைவர்கள் தங்களது ஆட்டோவில் காரை துரத்திச் சென்று வழிமறித்தனர்.ஆனால் டாடா சுமோவில் இருந்த ஆசாமிகள் ஆட்டோ டிரைவர்களை மிரட்டியும், சிலரை அடித்துத் தள்ளி விட்டும் காரைஎடுத்துக் கொண்டு பறந்து விட்டனர்.

இதற்குள் தனது கணவர் கடத்தப்பட்டதையறிந்த அவரது மனைவி ராதா உடனே கேரள போலீசாருக்குத் தகவல் தந்தார். ஆட்டோடிரைவர்கள் உதவியுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாடா சுமோ காரின் எண்ணையும் போலீசாரிடம் தெரிவித்தார்.வழக்குப் பதிவு செய்த சம்பாவூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உடனடியாக கண்ட்ரோல் ரூமுக்குத் தகவல் தந்தார்.

இதையடுத்து உஷாரான கேரள போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது ராதா குறிப்பிட்ட அந்த டாடா சுமோகார் கன்னியாகுமரி-கேரள எல்லையான அமரவில்லா என்ற இடத்தில் உள்ள செக் போஸ்டிக்கு வந்தது. அப்போது அந்தக் காரைகேரள போலீசார் தடுத்தி நிறுத்தினர்.

துப்பாக்கி முனையில் காரை போலீசார் முற்றுகையிட்டனர். அப்போது தான் தாங்கள் தமிழக போலீசார் என்ற விவரத்தை காரில்வந்தவர்கள் தெரிவித்தனர். மேலும் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்படிருப்பதாகவும் தமிழக போலீசார் கூறினர்.

இதையடுத்து கைதுக்குரிய ஆவணங்களைக் காட்டினால் தான் சுப்புவை அழைத்துச் செல்ல அனுமதிப்போம் என கேரளபோலீசார் கூறியதையடுத்து சேலம் மாவட்டம் அந்தியூர் நீதிமன்றத்தில் சிவசுப்பிரமணியத்தைக் கைது செய்ய வாங்கியவாரண்ட்டை தமிழக போலீசார் காட்டினர்.

இதையடுத்து அந்தக் காரை கேரள போலீசார் விடுவித்தனர். சுப்புவை கைது செய்து அழைத்துச் செல்லவும் அனுமதித்தனர்.

இச் சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கை நிருபர் ஒருவரை, கடத்தல்காரர்கள் போலவந்து காரில் கடத்திக் கொண்டு சென்றிருப்பதும், அவரது மனைவிக்குக் கூட தெரிவிக்காமல் கைது செய்துள்ள செயலும் கேரளமாநில பத்திரிக்கையாளர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பும், ஹிந்து பத்திரிக்கை ஆசிரியர் என்.ராம் உள்ளிட்டோர் பெங்களூரில் பயணம் செய்த காரை திடீரென்றுவழி மறித்து தமிழக போலீஸார் பயறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசால் பொடாவில் கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால் சில மாதங்களுக்கு முன்பு தான் விடுதலையானார்.அவருக்கு முன் கைதான நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியம் போலீசாரின் கொடுமைக்குப் பின் ஜாமீனில் வெளியே வந்தார்.இப்போது இன்னொரு நிருபரான சிவா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X