For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய வரிகளே இல்லாத தமிழக தேர்தல் பட்ஜெட் தாக்கல்: ரூ. 590 கோடி துண்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

புதிய வரிகள் ஏதும் இல்லாத, ரூ. 590.47 கோடி துண்டு விழும் பற்றாக்குறை பட்ஜெட்டை இன்று தமிழக அரசுசட்டசபையில் தாக்கல் செய்தது.

ரூ. 200 கோடி செலவில் கிராம மேம்பாட்டுக்கான நமது கிராமம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகம்செய்துள்ளது.

இன்று பிற்பகலில் நிதியமைச்சர் பொன்னையன் தாக்கல் செய்த 2004-05ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட்டில்,தேர்தல் வருவதையடுத்து புதிய வரிகள் ஏதும் விதிக்ப்படவில்லை.

இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

*விவசாய வருமானத்துக்கான வரி, நில வரி ரத்து.

* கம்ப்யூட்டர் பாகங்கள் மீதான விற்பனை வரி 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைப்பு. பேரீச்சம் பழம்,சுண்ணாம்புக் கல் ஆகியவற்றின் மீதான விற்பனை வரி 12 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகக் குறைப்பு.

*எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் 10 மருந்துகள் மீதான விற்பனை வரி அடியோடு ரத்து.

*கைவினைப் பொருள்கள் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகக் குறைப்பு. இசைக் கலைஞர்களைஊக்குவிக்கும் வகையில் இந்திய இசைக் கருவிகள் மீதான 4 சதவீத வரி ரத்து.

* ரூ. 6167.69 கோடியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம். இதற்கு மத்திய திட்டக் குழுவின் ஒப்புதல்கோரப்படும்.

* ரூ. 200 கோடியில் நமது கிராமம் திட்டம். இந்தத் திட்டத்திற்காக முதல் கட்டமாக ரூ. 52.21 கோடி ஒதுக்கீடுசெய்யப்படும். இத் திட்டத்தின் கீழ் கிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும். குடிநீர், துப்புறவு, வடிகால், சத்துணவு, தூய்மை, கல்வி, நீராதார மேம்பாடு, தெருவிளக்குவசதி, சாலை வசதி உள்ளிட்டவை இந்தத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும். இதற்காக கிராம சபை கூட்டப்பட்டுதிட்டங்கள் தீட்டப்படும்.

* ஏழை, எளியோருக்கு 2004-05ம் ஆண்டு காலத்தில் புதிதாக 36,426 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.மீனவர்களுக்காக ரூ. 15.65 கோடியில் 4,000 வீடுகள் கட்டித் தரப்படும்.

* 45,000 விவசாய பம்ப் செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.

*ரூ. 100 கோடியில் குளங்கள் தூர் வாரப்படும்.

* 6,492 கி.மீ. சாலைகளை மேம்படுத்த ரூ. 336.05 கோடியில் சிறப்புத் திட்டம். தமிழ்நாடு சாலைத் திட்டத்திற்காகரூ. 500 கோடி ஒதுக்கீடு.

* சட்டசபைத் தொகுதி உறுப்பினர்கள் மேம்பாட்டு நிதிக்கு ரூ. 192.70 கோடி ஒதுக்கீடு.

* சென்னை அருகே சோழிங்கநல்லூரில் அறிவுத் திறன் சார்ந்த தொழில் நகரியம் அமைக்கப்படும்.

* இந்திய அறிவியல் கழகம் (ஐ.ஐ.எஸ்) போல சென்னையில் தேசிய அறிவியல் ஆய்வு நிறுவனம் அமைக்கமுடிவு. சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இதை உருவாக்கும்.

* விளையாட்டு மற்றும் உடல் திறன் மேம்பாட்டுக்காக தனி பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

* எல்.கே.ஜி முதல் 12வது வகுப்பு வரை அறிவியல் தமிழ் பாடம் அறிமுகம்.

*அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் இறப்பைத் தடுக்கும் வகையில் 24 மணி நேர, பிறந்த குழந்தைகள்கண்காணிப்புத் திட்டம் அறிமுகம். மகளிர் திட்டங்களுக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு.

* வரும் ஆண்டில் மேலும் 25,000 மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும். சத்துணவுத்திட்டத்திற்கு ரூ.685.41 கோடி ஒதுக்கீடு.

* சென்னைக் குடிநீர் திட்டத்திற்கு ரூ. 80 லட்சம் ஒதுக்கீடு. வட கிழக்குப் பருவ மழை மற்றும் பருவ மழைபொய்த்ததால் ஏற்பட்ட வறட்சி பாதிப்பை எதிர்கொள்ள ரூ. 200.98 கோடி ஒதுக்கீடு.

* காவல்துறைக்கு ரூ. 1327.15 கோடி ஒதுக்கீடு. ரூ. 20 கோடியில் சென்னையில் புதிய டிஜிபி அலுவலகம்கட்டப்படும். சிறைத்துறைக்கு ரூ. 117.05 கோடி ஒதுக்கீடு. நீதித்துறைக்கு ரூ. 171.89 கோடி ஒதுக்கீடு.

* ஓசூர் மற்றும் தேனியில் தலா ரூ. 25 கோடியில் வேளாண் ஏற்றுமதி மண்டலம். நிலக்கோட்டையில் ரூ. 13கோடியில் உணவுப் பூங்கா அமைக்கப்படும்.

* ஊரகப் பகுதிகளில் வேலைக்கு உணவு அளிக்கும் திட்டத்தின் கீழ் ரூ. 341.92 ஒதுக்கீடு.

இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை. மாறாக பத்திரப்பதிவுத் துறை, வேளாண்துறைஆகியவற்றில் பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. குத்தகைப் பதிவு, பாகப்பிரிவினை உள்ளிட்டபத்திரப் பதிவுகளுக்குரிய முத்திரைத் தாள் கட்டணம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வரிக் குறைப்பு மற்றும் சலுகைகளால் ஆண்டுக்கு ரூ. 140 கோடி இழப்பு ஏற்படும் என்று அமைச்சர்பொன்னையன் தெரிவித்தார். 2004-05ம் ஆண்டுக்கான இறுதிப் பற்றாக்குறை ரூ. 590.47 கோடியாக இருக்கும்என்றும் அமைச்சர் பொன்னையன் கூறினார்.

பட்ஜெட் மீது விவாதம் கிடையாது என்று அரசு கூறிவிட்டதால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது திமுக, பாமக,காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் சபையில் இல்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.

-இன்று முதல் 13ம் தேதி வரை சட்டசபைக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்அறிவித்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X