24ல் காங்கிரஸ் நேர்காணல்: வேட்பாளர் தேடும் பா.ஜ.க
சென்னை:
தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின்தேர்தல் குழு இன்று கூடி விவாதித்தது.
இதையடுத்து காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மனு செய்துள்ளவர்களிடம் வரும் 24மற்றும் 25ம் தேதிகளில் நேர்காணல் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
காங்கிரசுக்கு திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் போட்டியிட மூதுபெரும் காங்கிரஸ்தலைகள் வரிந்து கட்டிக்கொண்டு வாய்ப்பு கேட்டு வருகின்றன. அதே நேரத்தில் இளைஞர்களை இறக்கிவிடகாங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.
இதனால் யாருக்கு சீட் கொடுப்பது என்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.
அதே போல ஒருவருக்கு ஒருவர் எதிராக செயல்பட்டு வரும் காங்கிரஸ் தலைவர் வாசனும், முன்னாள் தலைவர்இளங்கோவனும் தங்களது ஆதரவாளர்களுக்கு இடம் கிடைக்கச் செய்ய எல்லாவிதமான தகிடுதித்தங்களிலும்ஈடுபட்டுள்ளனர்.
இளங்கோவன் தனக்கு மூத்த தலைவர் கமல்நாத்திடம் உள்ள செல்வாக்கை வைத்து காய் நகர்த்த, வாசனோநேரடியாக சோனியாவிடம் பேசி வருகிறார்.
இருவரும் தங்களது ஆதரவாளர்களுக்கே சீட் கிடைக்க வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக உள்ளனர். அதேநேரத்தில் மூத்த தலைகளும் சீட் கேட்டு நச்சரித்து வருகின்றன. இதனால் வழக்கம்போல் டெல்லி தலைமை தான்வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து அறிவிக்கும்.
சென்னையில் பட்டியலை வெளியிட்டால் ரணகளமாகிவிடும் என்பதால், வழக்கம்போலவே தமிழக காங்கிரஸ்வேட்பாளர்களின் பட்டியல் டெல்லியில் தான் வெளியிடப்படும்.
வேட்பாளர்களை தேடும் பா.ஜ.க:
காங்கிரசின் நிலைமை இப்படி என்றால் அதிமுகவிடம் 7 தொகுதிகள் வாங்கிவிட்ட பா.ஜ.கவுக்கு 4 தொகுதிகளில்பரிச்சமயமான முகங்கள் இருந்தாலும் மற்ற மூன்றிலும் பிரபலமான ஆட்கள் இல்லாததால் யாரை நிறுத்துவது என்றகுழப்பம் நிலவி வருகிறது.
வேட்பாளர் வேட்டையில் அக் கட்சி தீவிரமாக உள்ளது. கே.என். லட்சுமணன் தலைமையிலான 15 பேர் கொண்டதேர்தல் குழு இன்று கூடி வேட்பாளர் தேர்வு குறித்து விவாதித்தது.
இந் நிலையில் இன்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுக்கோட்டையில் தனித்துப் போட்டியிடும் திட்டமில்லை.பா.ஜ.க. தலைமைக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்றார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications