யார் இந்த சிப்பிப்பாறை ரவிச்சந்திரன்?
சிவகாசி:
ஸ்டார் தொகுதிகளில் ஒன்றான சிவகாசியில் வைகோவுக்குப் பதிலாகப் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் கட்சியின் சாதாரணத் தொண்டராவார்.
35 வயதே ஆன இந்த இளைஞர் கோவில்பட்டி அருகே உள்ள சிப்பிப்பாறை என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர்.குடும்பமே தீவிரமான திமுக விசுவாசிகள். இந் நிலையில் மதிமுக உருவானபோது வைகோவுக்காக திமுகவை விட்டுவிலகினார் ரவிச்சந்திரன்.
கட்சியின் விவசாய அணித் துணைச் செயலாளராக இருந்து வரும் ரவிச்சந்திரன், வைகோவின் முரட்டுத் தொண்டர்.கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவரை சிவகாசியில் நிறுத்தினார் வைகோ. 23,000 வாக்குகள் பெற்றாலும்தோல்வியைத் தழுவினார் ரவிச்சந்திரன். இப்போது எம்.பி. தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார்.
மதிமுக சார்பில் திருச்சியில் போட்டியிடும் அக் கட்சியின் அவைத் தலைவரான எல்.கணேசன் 3 முறை திமுகஎம்.எல்.ஏவாக இருந்தவர். ஒருமுறை ராஜ்யசபா திமுக எம்.பியாக இருந்தார்.
வந்தவாசியில் நிற்கும் முன்னாள் அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். செஞ்சிதொகுதியில் 3 முறை திமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக இருந்த இவர் கடந்தமுறை திண்டிவனத்தில்போட்டியிட்டு எம்.பியாகி அமைச்சரானவர்.
பொள்ளாச்சி தொகுதியில் இப்போதைய எம்.பியான டாக்டர் கிருஷ்ணனையே மீண்டும் நிறுத்தியுள்ளார் வைகோ.நேர்மைக்குப் பெயர் போன இவர் வைகோவின் அன்புக்கும் பாத்திரமானவர். இவர் ஒரு டாக்டர்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications