For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு- தினகரனுக்கு பெரியகுளம், 29 புதுமுகங்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்ளின் பட்டியலை முதல்வர்ஜெயலலிதா இன்று அறிவித்தார். கடந்த முறை எம்.பிக்களாக இருந்த 11 பேரில் இரண்டு பேருக்கு மட்டுமேமீண்டும் போட்டியிட சீட் தரப்பட்டுள்ளது.

சசிகலாவின் அக்காள் மகனும் எம்.பியுமான டி.டி.வி. தினகரன் மீண்டும் பெரியகுளத்திலேயே போட்டியிடுகிறார்.தென்காசியில் கடந்த முறை போட்டியிட்டு எம்.பியான எஸ்.முருகேசனுக்கும் அதே தொகுதியில் திரும்பவும்போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

முன்னாள் ராஜ்யசபா எம்.பியும் கட்சியின் அமைப்புச் செயலாளருமான ஓ.எஸ். மணியனுக்கு இந்தத் தேர்தலில்போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர அய்யரை நடுரோட்டில் ஆள்வைத்து அடித்ததில் முக்கிய பங்கு வகித்த இவரை மயிலாடுதுறையிலேயே போட்டியிட வைத்துள்ளார் ஜெயலலிதா.

முன்னாள் திருச்செங்கோடு எம்.பியான எடப்பாடி பழனிச்சாமிக்கும் மீண்டும சீட் கிடைத்துள்ளது. இந்த நால்வரைத்தவிர மற்ற 29 பேருமே எம்.பி. தேர்தலுக்குப் புதியவர்கள்.

அதே நேரத்தில் கலைக்கப்பட்ட மக்களவையில் எம்.பிக்களாக இருந்த திண்டுக்கல் சீனிவாசன், பி.எச். பாண்டியன்,மலைச்சாமி ஐ.ஏ.எஸ், தலித் எழில்மலை, முனனாள் அமைச்சர் செல்வகணபதி, சரோஜா உள்ளிட்ட 9 பேருக்கும்இந்த முறை ஜெயலலிதா சீட் தரவில்லை.

தென் சென்னை தொகுதியில் ஜெயலலிதாவின் சர்ச் பார்க் பள்ளித் தோழியும், தமிழக வக்பு வாரியத்தின் முதல்பெண் தலைவருமான பதர் சையத் நிறுத்தப்பட்டுள்ளார்.

தனது பிறந்த நாளான இன்று அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். அதன் விவரம்:

1. மதுரை- ஏ.கே. போஸ் (மதுரை நகர் மாவட்டச் செயலாளர்)

2. மத்திய சென்னை- பாலகங்கா (மாவட்டச் செயலாளர்)

3. தென் சென்னை- திருமதி. பதர் சையீத் (வக்பு வாரியத் தலைவர்)

4. ஸ்ரீபெரும்புதூர்- டாக்டர் வேணுகோபால் (மருத்துவ அணி செயலாளர்)

5. செங்கல்பட்டு- கே.என். ராமச்சந்திரன் (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இ.செ.)

6. அரக்கோணம்- என். சண்முகம் (வேலூர் எம்.ஜி.ஆர் மன்ற து.செ.)

7. வேலூர்- பையூர் சந்தானம் (திருவண்ணாமலை வடக்கு மா.செ.)

8. திருப்பதூர்- கே.ஜி. சுப்பிரமணி (ஜோலார்பேட்டை ஒன்றியச் செயலாளர்)

9. வந்தவாசி- திருமதி லட்சுமி ராஜன் (போளூர் பேரூராட்சித் தலைவர்)

10. திண்டிவனம்- அருண்மொழித் தேவன் (கடலூர் மேற்கு மா.செ)

11. கடலூர்-சொரத்தூர் ராஜேந்திரன் (கடலூர் கிழக்கு மா.செ.)

12. கிருஷ்ணகிரி- வழக்கறிஞர் நஞ்சே கெளடு (தர்மபுரி கிழக்கு மா.செ.)

13. ராசிபுரம் (தனி)- எஸ். அன்பழகன் (நாமக்கல் மா.செ)

14. சேலம்- ராஜசேகரன் (மாவட்ட எம்.ஜி.ஆர். அணி இ.செ)

15. திருச்செங்கோடு- எடப்பாடி கே.பழனிச்சாமி (மாஜி எம்.பி)

16. கோபிச்செட்டிப் பாளையம்- என்.ஆர். கோவிந்தராஜ் (அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர்)

17. பொள்ளாச்சி (தனி) - ஜி. முருகன் (கோவை அதிமுக வழக்கறிஞர் பிரிவு)

18. பழனி- கிஷோர்குமார் (ஈரோடு அதிமுக வழக்கறிஞர் பிரிவு)

19. பெரிகுளம்-டி.டி.வி. தினகரன் (சசியின் அக்காள் மகன், கட்சியின் அமைப்புச் செயலாளர்)

20. கரூர்- ராஜா பழனிச்சாமி (மா.செ)

21. திருச்சி- பரஞ்ஜோதி (முன்னாள் மா.செ)

22. பெரம்பலூர் (தனி) - டாக்டர் எம்.சுந்தரம் (அதிமுக மருத்துவர் அணி)

23. மயிலாடுதுறை- ஓ.எஸ். மணியன் (அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர்)

24. நாகப்பட்டிணம் (தனி)- பி.ஜே. அர்சுணன் (எம்.ஜி.ஆர். இளைஞர் அணி)

25. தஞ்சாவூர்- தங்கமுத்து (முன்னாள் மா.செ)

26. புதுக்கோட்டை- ரவிச்சந்திரன் (அதிமுக வழக்கறிஞர் பிரிவு)

27. சிவகங்கை- கருப்பையா (மா.செ)

28. ராமநாதபுரம்- முருகேசன் (மா.செ)

29. சிவகாசி- பா.கண்ணன் (வழக்கறிஞர் பிரிவு)

30. திருநெல்வேலி- அமிர்தகணேசன் (தூத்துக்குடி நகரச் செயலாளர்)

31. தென்காசி (தனி) - எஸ்.முருகேசன் (மாஜி எம்.பி)

32. திருச்செந்தூர்- தாமோதரன் (தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மா.செ)

33. திண்டுக்கல்- எம்.ஜெயராமன் (மதுரை புறநகர் மா.செ)

இந்தப் பட்டியலை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். இதன் மூலம் கட்சியின்எம்.பி. தேர்தலுக்குப் புதுமுகங்களான பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களையும், எம்.ஜி.ஆரின் தீவிரமானவிசுவாசிகளையும் களத்தில் இறக்கி விட்டுள்ளார் ஜெயலலிதா. இதில் 11 பேர் வழக்கறிஞர்கள், 2 பேர் டாக்டர்கள்.

பிறந்த நாள் கொண்டாட்டம்:

முன்னதாக ஜெயலலிதாவின் 56வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஏகப்பட்டநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் 56 கிலோஎடையுள்ள கேக் வெட்டினார்.

பிறந்த நாள் மலரை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். பின்னர் அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல்வழங்கப்பட்டது. பொன்னையனைத் தொடர்ந்து இன்று அமைச்சர் விஸ்வநாதன் கோவிலில் தங்கத் தேர்இழுத்தார்.

பிறந்த நாளை முன்னிட்டு தலைமை அலுவலகத்துக்கு ஜெயலலிதா வருவார் என்று எதிர்பார்த்து கட்சியினர்பெருமளவில் கூடியிருந்தனர். ஆனால், அவர் வரவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X