ஜால்ராவை மாற்றினார் வீரமணி: திமுக கூட்டணிக்கு ஆதரவு
நெய்வேலி:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பது என திராவிடர் கழகம் முடிவெடுத்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின தீவிர விசிறியான வீரமணி, தொடர்ந்து அந்தக் கட்சியையேஆதரித்து வந்தார்.
இந் நிலையில் நெய்வேலியில் நடந்த திராவிடர் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில் திமுக கூட்டணியைஆதரிக்க பெரும்பாலான நிர்வாகிகள் நிர்பந்தித்தனர். இதையடுத்து வீரமணி கொண்டு வந்த தீர்மானத்தில்,
பா.ஜ.கவுடன் இனி எக்காலத்திலும் கூட்டு சேர மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்த முதல்வர் ஜெயலலிதா,இப்போது அக்கட்சியுடன் கூட்டு சேர்ந்துள்ளார். இது தமிழக மக்களுக்குச் செய்த துரோகமாகும். இதைவன்மையாகக் கண்டிக்கிறோம்.
பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து வாக்களிக்கும் கடமை திராவிடர் கழகத்துக்கு இருப்பதால், அக்கூட்டணியை தமிழகமக்கள் எதிர்க்க வேண்டும் என்று வேண்டுகிறோம். பா.ஜ.க. கூட்டணியை தோற்கடிக்கும் பலம் திமுக கூட்டணிக்குஇருப்பதால் அக்கூட்டணிக்கு வாக்களிப்போம்.
அதே நேரத்தில் வலியச் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தி.க. உறுப்பினர்கள் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லைஎன்றார்.












Click it and Unblock the Notifications