திமுக கூட்டணிக்கு 30 இடங்கள் கிடைக்கும்: கருத்து கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக சென்னைஅனைத்துக் கல்லூரி மாணவர் பேரவை சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, நந்தனம் கல்லூரி, புதிய கல்லூரி, லயோலா கல்லூரி ஆகியவற்றின்மாணவர்கள் இரு ஆசிரியர்கள் மற்றும் கைடுகளின் தலைமையில் தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் மக்களவைத்தேர்தல் கருத்துக் கணிப்பை நடத்தினர்.

அதன் முடிவுகள்:

*திமுக கூட்டணி 28 முதல் 30 தொகுதிகளில் வெற்றி பெறும். இந்தக் கூட்டணிக்கு 60 சதவீத வாக்குகள் கிடைக்கும்.

*அதிமுக கூட்டணிக்கு 10 முதல் 12 இடங்கள் கிடைக்கும். இந்தக் கூட்டணிக்கு 40 சதவீத வாக்குகள் கிடைக்கும்.

*அனைந்திந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணிக்கு பலத்த ஆதரவு உள்ளது. பிரதமர் போட்டியில் காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி முதலிடத்தையும், பிரதமர் வாஜ்பாய் இரண்டாம் இடத்தையும், மன்மோகன் சிங் 3ம்இடத்தையும், பிரியங்கா 4ம் இடத்தையும், துணைப் பிரதமர் அத்வானி 5ம் இடத்தையும் தமிழக மக்களிடம்பெற்றுள்ளார்கள்.

* தமிழகத்தில் திமுகவுக்கு 30 சதவீத வாக்குகளும், அதிமுகவுக்கு 23 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் கட்சிக்கு 12சதவீத வாக்குகளும், கம்யூனிஸ்ட்களுக்கு 10 சதவீத வாக்குகளும், மதிமுகவுக்கு 8 சதவீத வாக்குகளும்,பா.ம.கவுக்கு 6 முதல் 7 சதவீத வாக்குகளும், பா.ஜ.கவுக்கு 4 சதவீத வாக்குகளும் உள்ளன.

இந்தக் கருத்துக் கணிப்பு நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்துப் பகுதிகளிலும் நடத்தப்பட்டுள்ளது. ஆய்வில்கலந்து கொண்டவர்களில் 50 சதவீதம் பேர் 25 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள். 23 சதவீதம் பேர் 45 முதல் 55வயதானவர்கள், மற்றவர்கள் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

இது தவிர தமிழகத்தில் அதிகமாக பார்க்கப்படும் டிவி எது என்ற கருத்துக் கணிப்பையும் இந்த மாணவர்கள்நடத்தினர். அதன் முடிவுகள்:

சன் டிவி- 65 சதவீதம்

தூர்தர்ஷன்- 11.5 சதவீதம் (பெரும்பாலும் கேபிள் இணைப்பு இல்லாத வீடுகளில்)

விஜய் டிவி- 4.4 சதவீதம்

சன் டிவியின் கே.டிவி- 3 சதவீதம்

ராஜ் டிவி- 2.2 சதவீதம்

ஜெயா டிவி- 2 சதவீதம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+