For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பா.ஜ.கவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: அத்வானி யாத்திரை குறித்து கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தோல்வி பயம் வந்துவிட்ட காரணத்தில் தான் அத்வானி ரத யாத்திரை கிளம்புவதாக திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.

மதக் கலவரங்களைத் தூண்டும் வகையில் அத்வானி மேற்கொள்ள இருக்கும் இந்த ரத யாத்திரையைத் தடுத்துநிறுத்துமாறும் அவர் பிரதமர் வாஜ்பாய்க்கு கோரிக்கை விடுத்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி,

தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற பயம் பா.ஜ.கவுக்கு வந்துவிட்டது. இதனால் இந்த யாத்திரையைத்துவக்குகிறார் அத்வானி. இதனால் யாத்திரையை எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அதுகண்டனத்துக்குரியது.

தேர்தல் தேதியை அறிவிக்க பின்னர் தான் ரோடு ரிப்பேர் செய்ய வேண்டுமே என்று தமிழக அரசுக்குத்தோன்றியுள்ளது. இதனால் விறுவிறுப்பாக மாநிலம் முழுவதும் சாலைகளை செப்பனிட்டு வருகிறார்கள். இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் கூட்டணிக் கட்சிகள் சார்பில் புகார் தரப்படும்.

சோனியா வெளிநாட்டுக்காரர் என்றும், அவர் தலைமையிலான காங்கிரசுடன் கூட்டு சேர்ந்ததால் தான் திமுகவில்இருந்து விலகி பா.ஜ.க- அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக ஆலடி அருணா கூறியிருக்கிறார். காங்கிரஸ்-திமுககூட்டணி உருவானது ஜனவரி மாதத்தில். அதன் பிறகு பிப்ரவரி 5ம் தேதி இதே கூட்டணி சார்பில் திருச்செந்தூரில்போட்டியிட ஆலடி அருணா சீட் கேட்டார்.

திமுகவில் சீட் கேட்டு விண்ணப்பித்து, நேர்காணலிலும் கலந்து கொண்டபோது இந்த ஆலடி அருணாவுக்கு,சோனியா இத்தாலியில் பிறந்தது தெரியாதா?

பாண்டிச்சேரியைப் பொறுத்தவரை பா.ம.கவின் நிலைக்கே எங்கள் ஆதரவு. கூட்டணி உடன்பாட்டை ஏற்கவேண்டியது காங்கிரசின் கடமை என்றார் கருணாநிதி.

முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த காலத்தில் ரத யாத்திரையை அத்வானி நடத்தியபோது நடந்த கலவரங்கள், வன்முறைகளை மறக்கமுடியுமா?. ரதம் என்பதும், யாத்திரை என்பதும் மரியாதைக்குரிய சொற்களாக இருந்ததையே மாற்றியதுஅத்வானியின் கடந்த கால ரத யாத்திரை. இதனால் அதைத் தடுக்க வேண்டிய கடமை பிரதமர் வாஜ்பாய்க்குஉண்டு.

மேலும் ஹோட்டலில் வைத்து லஞ்சம் வாங்கி டிவி கேமராவில் பிடிபட்ட முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் திலிப் சிங்ஜூதேவுக்கு சொந்தமான சொகுசு பஸ்ஸைத் தான் அத்வானி இந்தமுறை ரதமாக பயன்படுத்தப் போகிறார் என்றுகூறியிருந்தார் கருணாநிதி.

வசைமொழி வாந்தி ஏன்? கருணாநிதி கேள்வி

கருணாநிதி வெளியிட்ட இன்னொரு அறிக்கையில் வாரிசுகள், வழித் தோன்றல்களை திமுக மட்டுமேஊக்குவிப்பதாக கூறி பத்திரிகைகள் கேலிச் சித்திரங்கள் வரைவதாகவும், வசை மொழி பாடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த அறிக்கையின் விவரம்:

முன்பு சுப்பராயன் மத்திய அமைச்சராக இருந்தபோதும், அதன் பின்னர் அவரது மகன் மோகன் குமாரமங்கலம்அமைச்சரானபோதும், அவரது மகன் ரங்கராஜன் குமாரமங்கலம் அமைச்சரானபோதும் அதை பெருமையாககூறினார்கள், புகழ் மொழி பேசினார்கள்.

இப்போது சுப்பராயனின் பேத்தி லலிதா குமாரமங்கலம் பா.ஜ.கவில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடப்போவதையும் பெருமையாக கூறிக் கொள்கிறார்கள்.

அதேபோல வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராமசுகந்தன் பா.ஜ.கவில் சேர்ந்ததையும், கர்நாடகத்தில்பங்காரப்பாவும், அவரது மகன் குமார் பங்காரப்பாவும் பா.ஜ.கவில் சேரப் போவதையும் பெருமையாக கூறிவருகிறார்கள்.

ஆனால் திமுகவில் மட்டும் வழித் தோன்றல்கள் உருவானால் அதை விமர்சித்தும், வசை மொழி பாடியும் கிண்டல்செய்கிறார்கள், கேலிச் சித்திரங்கள் வரைந்து வசை மொழி வாந்தி எடுக்கிறார்கள்.

பாஜக என்றால் இவர்களுக்கு இனிப்பாகவும், திமுக என்றால் எட்டிக் காயாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X