For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி பிரசாரம்: ஜெ. தொடங்கிய இடத்திலிருந்தே..

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தை தொடங்கிய சென்னை மெரீனா கடற்கரை குடிசை மாற்று வாரிய அலுவலகம்அமைந்துள்ள அதே இடத்திலிருந்து திமுக தலைவர் கருணாநிதியும் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.

கருணாநிதியின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பிரயாண விவரத்தை கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்கள்விடுதலை விரும்பி எம்.பி, கம்பம் செல்வேந்திரன் ஆகியோர் வெளியிட்டனர்.

வரும் 22ம் தேதி மாலை 3.30க்கு சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரியஅலுவலகத்திற்கு அருகே இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

6 மணிக்கு காஞ்சிபுரத்தில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் ஆரணி, செய்யாறு, திருவண்ணாமலை ஆகியஇடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.

23ம் தேதி கிருஷ்ணகிரி பகுதியிலும், 24ம் தேதி ஒசூர் பகுதியிலும் பிரச்சாரம் செய்கிறார். ஏப்ரல் 5ம் தேதிசென்னையில் வீரபாண்டியன் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார். 8ம் தேதி முதல் 11ம் தேதிவரை சென்னை, வேலூர், குடியாத்தம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருச்செங்கோடு, ஈரோடு ஆகியஇடங்களிலும்,

12ம் தேதி முதல் 19ம் தேதி வரை கோபிச்செட்டிபாளையம், கோவை, திருவள்ளூர், பொன்னேரி, திண்டிவனம்,விழுப்புரம் ஆகிய இடங்களிலும்,

20ம் தேதி முதல் 24ம் தேதி வரை கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகியஇடங்களிலும்,

29ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, திருச்செந்தூர்,அருப்புக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களிலும், மே 6 முதல் 8 வரை சென்னையிலும் பிரச்சாரம்செய்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அயராது பாடுபட கருணாநிதி அழைப்பு

தேர்தல் பிரச்சாரத்தில் அயராது பாடுபட ஆயத்தமாகுமாறு திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி அழைப்புவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தேர்தல் தொடர்பாக திமுக உடன் பிறப்புகள் எனக்குஏராளமான கடிதங்கள், கட்டுரைகளை அனுப்பி வருகிறார்கள். அவையெல்லாம் என்னை களிப்புறச் செய்கிறது.

தர்மபுரியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் எழுதிய கட்டுரை அதற்கு ஒரு சான்று. அவரது கட்டுரையில், கடந்த1977ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஜனதாக் கட்சியுடன் உடன்பாடு ஏற்பட்டது. இதன்காரணமாக மத்திய சென்னை ஜனதாக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

கூட்டணி முறிந்து விடக் கூடாது என்பதற்காக மத்திய சென்னையில் போட்டியிடுவது என்ற முடிவை வாபஸ்பெற்றுக் கொண்டு அதை ஜனதாக் கட்சிக்கே விட்டுக் கொடுப்பதாக முரசொலி மாறன், நீலம் சஞ்சீவ ரெட்டிக்குகடிதம் அனுப்பியதை ராஜசேகரன் நினைவு கூர்ந்துள்ளார்.

மதச்சார்பற்ற கூட்டணி அமைத்து, மதச்சார்பற்ற ஆட்சி அமைப்போம் என்ற குறிக்கோளுடன் கொடி பிடிப்போம்என்று ராஜசேகரன் எழுதியுள்ளது எனது எண்ணத்தை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X