For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குட்டையைக் குழப்புகிறாரா ரஜினி?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வழக்கமாக ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் ரஜினிக்கு தேசப் பக்தி பெருக்கெடுக்கும். அதே போல தனது படங்கள்வெளியாவதற்கு முன்பும் அதிரடியாக ஏதாவது செய்வதும் உண்டு.

இந்த முறை அவருக்கு மிக நெருக்கமான ஒரு பத்திரிக்கையாளர் உள்ளிட்டவர்களின் நெருக்குதலால் பா.ஜ.கவைஆதரிக்கும் முடிவில் இருந்தார்.

ஆனால், அது எந்த அளவுக்கு எடுபடும், அல்லது எப்படி களத்தில் இறங்குவது என்ற குழப்பத்தில் இருந்தரஜினிக்கு ராமதாஸ் என்ற நொண்டிச் சாக்கு கிடைத்துள்ளது.

இதையடுத்து பா.ம.க எதிர்ப்பு என்ற பெயரில் தனது வழக்கமான குழப்ப வேலையில் ரஜினி இறங்கியுள்ளார்.

பா.ம.கவுக்கு மட்டும் எதிர்ப்பு என்று ரஜினி கூறினாலும் பா.ஜ.க., அதிமுக போட்டியிடும் பிற தொகுதிகளிலும்அவரது ரசிகர் படை களத்தில் குதித்துள்ளதை மறுக்க முடியாது.

தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசி வரும் நிலையில் அதை சமாளிக்க முடியாமல் திணறி வரும்முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆபத்பாந்தவனாக வந்து சேர்ந்துள்ளார் ரஜினி.

இதையடுத்து ராமதாஸ் எதிர்ப்பு உள்ளிட்ட ரஜினி ரசிகர்களின் எல்லா போராட்டங்களுக்கும் போதிய பாதுகாப்புதருமாறு காக்கிச் சட்டைகளுக்கும், தேவையான பண உதவிகள் செய்யுமாறு அதிமுகவினருக்கும்உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா.

இதைத் தொடர்ந்து பல இடங்களில் ரஜினி ரசிகர்களை வளைத்து வருகின்றனர் அதிமுகவினர்.

ஜெயலலிதா பிரச்சாரத்துக்குச் செல்லும் வழியில் எல்லாம் பொது மக்கள் காலிக் குடங்களுடன் தண்ணீர் கேட்டுபோராட்டத்துக்கு வருவதைத் தடுக்கும் போலீசாரின் கண்களில், ராமதாஸ் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக்கொடிகளுடன் வரும் ரஜினி ரசிகர்கள் படாமல் போவது எதனால் என்று தெரியவில்லை.

ஜெயலலிதா வரும் வழியில் காலிக் குடத்துடன் தண்ணீர் பிடிக்கக் கூட யாரும் வெளியே வந்துவிடக் கூடாது என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் குடத்துடன் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே லத்தியைத் தூக்கிக்கொண்டு விரட்டுகின்றனர் போலீசார்.

அதே போல விவசாயிகள் கருப்புக் கொடி ஏதும் எடுத்துக் கொண்டு வந்து போராட்டம் நடத்திவிடக் கூடாதுஎன்பதற்காக, கண்களில் லிட்டர் கணக்கில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு திரியும் போலீசார் ரஜினி ரசிகர்கள்கருப்புக் கொடிகளைத் தூக்கி வரும்போது பாசத்தோடு பாதுகாப்பு தருவதை பார்க்க முடிகிறது.

ஜனநாயக நாட்டில் கருப்புக் கொடி காட்டுதல் போன்ற அகிம்சையான போராட்டம் நடத்துவது மிக நியாயமானதுதான். அதை ராமதாஸ் உள்பட யாரும் மறுக்க முடியாது. கருப்புக் கொடி காட்டினால் அடிப்போம் என்றுபா.ம.கவினர் கொக்கரிப்பதும் எந்த வகையிலும் சரியல்ல.

ஆனால், போராட்டம் என்று வந்துவிட்ட பிறகு ஜெயலலிதா, ரஜினி ரசிகர்களுக்கு ஒரு நீதி ராமதாஸ்போன்றவர்களுக்கு இன்னொரு நீதி என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

ராமதாஸை எதிர்க்க நினைக்கும் ரஜினி நேரடியாகவே தனது வேட்பாளர்களை பாமக போட்டியிடும் தொகுதிகளில்நிறுத்தி தனது பலத்தைக் காட்டியிருக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலான பொது மக்களின் கருத்தாகஉள்ளது.

ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று வசனம்பேசிய ரஜினி இப்போது அவருடன் கூட்டணி சேர்ந்துள்ளது தமிழகத்தின் நலனில் அவருக்கு இருந்த அக்கறைஅவ்வளவு தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தனிப்பட்ட முறையில் தனக்கும் ரசிகர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை வைத்துத் தான் ரஜினி அரசியல்செய்கிறாரோ என்றும் சந்தேகிக்கக் தோன்றுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X