For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. மீதான விமர்சனம்: பெண்களையே இழிவுபடுத்திவிட்டார் கருணாநிதி- அதிமுக சொல்கிறது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்துள்ளதன் மூலம், பெண்களையே கருணாநிதிஇழிவுபடுத்திவிட்டதாக தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக தலைமை நிலைய செயலாளரும், அமைச்சருமானஜெயக்குமார் அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

கருணாநிதி அவருடைய முதிய வயது காரணமாக நிதானமிழந்து கடந்த 3ம் தேதி அவரது குடும்ப ஏடானமுரசொலியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது நாகரீகமற்ற, பாலினம் தொடர்பான தனிப்பட்டதாக்குதல்களை தொடுத்து உள்ளார்.

அமேதி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியின் கன்னிப்பேச்சை கேட்டதும் கண்ணீர் வடித்ததாககருணாநிதி கூறியதை பாசாங்கு என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மதுரைக்கு வந்த போதும், தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்த போதும் அவர்மீது நடந்த கொடூர தாக்குதலைப் பார்த்து கருணாநிதி கண்ணீர் வடிக்கவில்லை. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திதமிழ்நாட்டில் கொலை செய்யப்பட்ட கண்ணீர் வடிப்பதாக கருணாநிதி எந்தக் கடிதமும் எழுதவில்லை.

இந்த அடிப்படையில்தான் ஜெயலலிதா பேசினார். கருணாநிதியின் நாடக அறிக்கையை யாரும் நம்ப மாட்டார்கள்என்று கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கருணாநிதி முரசொலியில் தனது கருத்தை வெளியிட்டார். அவரது கட்டுரையின்ஆங்கிலத்தில் மொழியாக்கம் இத்துடன் தரப்பட்டு உள்ளது. அவரது கட்டுரையில்,

ஜெயலலிதா காந்தாரியாகவே மாறி என்னை சாடி இருக்கிறார். ராகுலின் கன்னிப் பேச்சை கேட்டு நான் உணர்ச்சிவசப்படுவதும், கண்ணீர் உதிர்ப்பதும் அம்மையாருக்கு ஆச்சரியமாயிருக்கிறதாம். என்ன செய்வது என்னைப்போல பிள்ளைகுட்டி பெற்றவர்களுக்கு ராகுலின் பேச்சு கண்ணீரைத்தான் வரவழைக்கும்.

ராகுல் என்ற இளைஞரை நான் பாராட்டினேன் என்றால் நான் மலடும் அல்ல என் மனமும் கல்லும் அல்ல. பிள்ளைகுட்டி பெற்றவன் நான். -சிலர் பெற்றே இருக்க மாட்டார்கள், பெறவும் விட மாட்டார்கள். அவர்களுக்கு கண்ணீர்என்பது கேலிக்குரிய ஒன்றுதான்.

கிளிசரினால் மட்டுமே கண்ணீர் வடிப்பவர்களுக்கு உண்மைக் கண்ணீரைக் கிண்டல் செய்யத் தான் தெரியும் என்றுகூறியுள்ளார். ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி தேவை இல்லாமல், அவரது பெயருக்கு அவதூறுவிளைவிக்கும் வகையில் அறிக்கைகள் வெளியிட்டு இருக்கிறார் கருணாநிதி.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட நடத்தை விதிகளில், ஒரு கட்சி, பிற அரசியல் கட்சிகள் பற்றி குறை கூறும் போது,அவர்களுடைய கொள்கைகள், கடந்த கால சாதனைகள், பணிகள் ஆகியவை பற்றி மட்டுமே பேச வேண்டும்.சொந்த வாழ்க்கை பற்றி குறை கூறுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

ஆனால் ஜெயலலிதாவை மலடு, குழந்தை இல்லாதவர் என்று அரசியலுக்கு சம்பந்தம் இல்லாமல் தனிப்பட்டதாக்குதலை தொடுத்து இருக்கிறார் கருணாநிதி.

எனவே இதுபோன்று பெண்களை இழிவாகக் கூறும் விஷயங்களை அறிக்கைகளாக வெளியிடுவதையும்,பேசுவதையும் தடுக்க கருணாநிதிக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜெயக்குமார் தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவின் ஒரு நகல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X