For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹாக்கி: தன்ராஜ் பிள்ளைக்கு வைகோ ஆதரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

உலகின் மிகச் சிறந்த ஹாக்கி வீரர்களின் ஒருவரான தன்ராஜ் பிள்ளையை மீண்டும் இந்திய அணியில்சேர்க்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகரான தன்ராஜ் பிள்ளை வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான் என்றாலும், அவரைஒடுக்குவதிலேயே சில லாபிகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. அவர்களின் நெருக்கடிகளையும்மீறி நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் போராடி விளையாடும் வீரர் தன்ராஜ்.

விளையாட்டிலும், உடல்ரீதியிலும் நல்ல நிலையில் இருந்தாலும் தன்ராஜ் பிள்ளையை டீமை விட்டுவெளியேற்ற அந்த லாபிகள் தீவிரமாக முயன்று வந்தன. இப்போது வெற்றியும் பெற்றுவிட்டன.

ஒலிம்பிக் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.இதற்கு லட்சக்கணக்கான ஹாக்கி ரசிகர்களிடம் இருந்து கண்டனம் எழுந்துள்ளது.

இதையடுத்து அவரை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என தேசிய அளவில் குரல்கள் எழஆரம்பித்துள்ளன. இந் நிலையில் வைகோவும் பிள்ளைக்கு ஆதரவாக குரல் தந்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய ஹாக்கி பெடரேசன் தலைவர் பி.எஸ்.கில்லுக்கு வைகோ எழுதியுள்ளகடிதத்தில்,

தன்ராஜ் பிள்ளையை அணியை விட்டு நீக்குவது என்பது மிக ஒருதலைப்பட்சமான முடிவு. இதில்எந்த நியாயமும் இல்லை. திட்டமிட்டு அவரை பழிவாங்க முயற்சி நடக்கிறது.

திறமை வாய்ந்த அந்த வீரன், தன் வாழ்நாள் கனவான ஒலிம்பிக் வாய்ப்பு மறுக்கப்பட்டால், மனம்நொறுங்கிப் போய்விடுவான். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தந்தை ஸ்தானத்தில் இருக்கும் நீங்கள்,தன்ராஜை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும்.

உலகில் ஹாக்கி விளையாடும் எல்லா நாடுகளுமே பிள்ளையின் மீது தனி மரியாதையும் மதிப்பும்வைத்திருக்கின்றன. அந்த அளவுக்கு தன் விளையாட்டுத் திறமையால் அனைவரையும் கவர்ந்தவர்அவர்.

உலகின் முன்னணி ஹாக்கி வீரர்கள் மத்தியில் பிள்ளைக்கு இருக்கும் பெயர் உலகறிந்தது.

அவரை மீண்டும் அணியில் சேர்த்தால் தன் உழைப்பால் நாட்டுக்கு நிச்சயம் வெற்றியைத் தருவார்என்று கூறியுள்ளார் வைகோ.

எறும்புகளிடம் பாடம் கற்றேன்- வைகோ!

இந் நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் வைகோ பேசினார்.

இதே திருமங்கலத்தில், அதே இடத்தில் அமைக்கப்பட்ட மேடையில் நடந்த பொதுக் கூட்டத்தில் முன்பு விடுதலைப் புலிகளை ஆதரித்துப்பேசியதால்தான் அவர் வேலூர் சிறைக்கு பொடா கைதியாக செல்ல நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வைகோ பேசுகையில், நான் வேலூர் சிறையில் 19 மாதங்கள அடைபட்டிருந்தபோது எனக்கு தைரியம் தந்தவை எறும்புகள்தான்.எனது அறைக்குள் அவ்வப்போது எறும்புகள் வந்து செல்லும். அவற்றைப் பார்த்து, அவற்றின் சுறுசுறுப்பைப் பார்த்து நான்கற்றுக் கொண்டேன்.

அதேபோல எனக்குக் கொடுக்கப்படும் சப்பாத்தியிலும் சில எறும்புகள் இருக்கும். அந்த சப்பாத்திகளை துளைத்துக் கொண்டு அவைசெல்லும். சப்பாத்தியை எடுத்து எங்கு வைத்தாலும் எறும்புகள் விடாமல் அதை துரத்திக் கொண்டே இருக்கும்.

இதேபோல, ஒருமுறை கோர்ட்டுக்குச் சென்று விட்டு மீண்டும் சிறைக்குத் திரும்பியபோது தொண்டர்கள் கொடுத்த வெள்ளரிக்காயைஅறைக்குள் வைத்தேன். அவற்றையும் எறும்புகள் விடவில்லை. அறைக்குள் வைக்கப்பட்டிருந்த துடைப்பத்தின் மீதேறிவெள்ளக்காயை அடைந்தன.

இதிலிருந்து எனக்குத் தெரிந்தது ஒன்று தான், லட்சியத்தை அடைவதென்றால் கடுமையாக உழைக்க வேண்டும், விடாமல்முயற்சிக்க வேண்டும், அப்படிச் செய்தால் நிச்சயம் வெற்றிதான் என்பதை எறும்புகள் வாயிலாக உணர்ந்து கொண்டேன் என்றார்வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X