For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது: அதிமுக தோற்கும்- எக்ஸிட் போல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கருதப்பட்ட பா.ஜ.க. கூட்டணிக்கு வெறும் 230 முதல் 250இடங்களே கிடைக்கும் என இறுதிக் கட்ட எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது. ஆட்சிஅமைக்க 272 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி, தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டால், உருவாகும் சிக்கல்களை எதிர்கொள்வதுகுறித்து அரசியல் சட்ட நிபுணர்களுடன் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆலோசனைகள் நடத்த ஆரம்பித்துள்ளார்.

இன்று முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன், முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மாஆகியோரை ராஷ்ட்ரபதி மாளிகைக்கு அழைத்து கலாம் ஆலோசனை நடத்தினார்.

நாடு முழுவதும் 5 கட்டத் தேர்தல்களும் முடிவடைந்துவிட்ட நிலையில் என்.டி.டி.வி. வெளியிட்டுள்ள எக்ஸிட்போல் கருத்துக் கணிப்பின்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 230 முதல் 250இடங்களே கிடைக்கும்.

காங்கிரஸ் கூட்டணிக்கு 190 முதல் 205 இடங்கள் கிடைக்கும் என்றும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்டஇடதுசாரிகளுக்கு 40 முதல் 50 இடங்கள் கிடைக்கும் என்றும், முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின்பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு 60 முதல் 70 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில்....

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 31 இடங்களும் அதிமுக-பா.ஜ.க. கூட்டணிக்கு 8இடங்களும் கிடைக்கும் என்றும் என்.டி.டி.வி. எக்சிட் போல் தெரிவிக்கிறது.

அனைத்து கட்டத் தேர்தல்களும் முடிவடைந்து, எக்ஸிட் போல் முடிவுகள் சாதகமாக இல்லாத நிலையில் பா.ஜ.க.தலைவர்களின் கூட்டம் இன்று பிரதமர் வாஜ்பாயின் இல்லத்தில் நடக்கிறது.

பிற கணிப்புகள்:

இந்தியா டுடே- ஆஜ் தக் டிவியின் எக்ஸிட் போலின்படி தேசிய அளவில் பா.ஜ.க. கூட்டணிக்கு 248 இடங்களும்,காங்கிரஸ் கூட்டணிக்கு 191, இடதுசாரிகள் மற்றும் பிற கட்சிகளுக்கு 104 இடங்கள் கிடைக்கும் என்றுதெரியவந்துள்ளது.

ஸ்டார் நியூஸ் டிவி எக்ஸிட் போலின்படி பா.ஜ.க. கூட்டணிக்கு 263-275 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு174-186, இடதுசாரிகள் மற்றும் பிற கட்சிகளுக்கு 86 முதல் 96 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜீடிவியின் எக்ஸிட் போலின்படி பா.ஜ.க. கூட்டணிக்கு 249 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 176,இடதுசாரிகள் மற்றும் பிற கட்சிகளுக்கு 117 இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

India Shining (இந்தியா ஒளிர்கிறது), Feel good factor போன்ற படா படா கோஷங்களுடன் ஆட்சிக் காலம்முடிவதற்கு முன்பாகவே நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தது பா.ஜ.க.

இந்த கோஷங்களால் எந்தப் பலனும் இல்லை என்பது தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த பின்னர் தான் பா.ஜ.கவுக்குஉறைத்தது. இதையடுத்து வாஜ்பாயின் பெயரைச் சொல்லி ஓட்டுக் கேட்டது. அதற்கு ஓரளவுக்குப் பலன் இருந்ததுஎன்றாலும் மெஜாரிட்டியைப் பெரும் அளவுக்கு அந்த முயற்சி உதவாது என்றே தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X