For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலி வாக்காளர்களால் தான் அதிமுகவுக்கு தோல்வி: ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுகவினர் லட்சக்கணக்கில் போலி வாக்காளர்களைச் சேர்த்ததால் தான் அதிமுகவுக்கு தோல்வி ஏற்பட்டதாகமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவரது அறிக்கை விவரம்:

நேற்று திமுக தலைமையிலான 7 கட்சிக் கூட்டணிக் தலைவர்களும் கலந்து பேசி, அதிமுக அரசு மீதுஅபாண்டமான பழிகளைப் போட்டு தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களை தமிழக அரசு திட்டமிட்டு நீக்கிவிட்டதாகச் சொல்லிஎன்னை பதவி விலகச் சொல்லி தீர்மானம் போட்டுள்ளார்கள்.

பெயர்களை அதிமுக அரசு நீக்கியதாக சொல்வது கேலிக்கூத்தாகும். லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டதுஉண்மையே. ஆனால், நீக்கப்பட்ட பெயர்களில் பெரும்பான்மையாக உள்ளது அதிமுக ஆதரவாளர்கள் என்பதுஉண்மை.

அத்தோடு லட்சக்கணக்கான போலி வாக்காளர்களை திமுக சேர்த்திருப்பதும் உண்மை. நிலைமை இப்படியிருக்குஎன்னை பதவி விலகச் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை.

தானே தோற்க, எந்த ஒரு செயலையாவது எந்த ஒரு அரசாவது செய்யுமா. கோயபல்ஸ் பாணியில் பொய்யைப்பரப்புவது திமுகவின் வாடிக்கை. திருடியவனே, திருடன், திருடன் என்று கூவிக் கொண்டு ஓடி திருட்டை திசைதிருப்பது போன்றது இது.

வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டது அதிமுக தான். பாதிக்கப்பட்ட நாங்களேஅமைதியாக இருக்கிறோம். ஆனால், மகா திருட்டை திட்டமிட்டு செய்துவிட்டு கூக்குரல் இடுகிறது திமுக. அதிமுகஅரசை ராஜினாமா செய்யச் சொல்கிறது.

வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதும் நீக்குவதும் தன்னாட்சி அமைப்பான தேர்தல் கமிஷனின் வேலை.இதனை வருடம் அரசியலில் உள்ள முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு இது தெரியாதா? யாரை ஏமாற்றஇந்தத் தீர்மானம்.

அதே போல தேர்தலில் 40 தொகுதிகளிலும் வென்று புதிய வரலாற்றை உருவாக்கிவிட்டதாகக் கூறியிருக்கிறார்கருணாநிதி. இது வரலாறே இல்லை.

1991ம் ஆண்டில் 40லிலும் அதிமுக கூட்டணி வென்றதே, அது தான் வரலாறு. சரித்திரத்தை அன்றே படைத்ததுஅதிமுக. எனவே புது வரலாறு படைத்ததாக மார்தட்டிக் கொள்பவர்கள், முழுப் பூசணிக்காயை சோற்றில்மறைக்கும் கபட நாடகக்காரர்கள்.

1977ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, நாடாளுமன்றத் தேர்தலில் மாநில அரசை ஆளும் கட்சி தோல்விகண்டால், அந்த அரசை கலைக்கலாம் என்று சுப்பிரமணியம் சுவாமி சொன்னதாக ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையில்படித்தேன்.

அதே நீதிமன்றம் தான் 1994ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவை வைத்து மாநில அரசைக் கலைக்கஅரசியல் சட்டம் இடம் தரவில்லை என்றும் தீர்ப்பளித்தது.

மெத்தப்படித்த சுப்பிரமணியம் சுவாமி இது தெரியாதா? இதை அந்த ஆங்கிலப் பத்திரிக்கை மறத்துவிட்டதா?மறந்துவிட்டதா?

அதே போல பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் மக்களின் ஆதரவை அதிமுக இழந்துவிட்டது போல ஒருபொய்யான தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாங்களும் பா.ஜ.கவும் மட்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதில் 1 கோடி வாக்குகளைப் பெற்றுள்ளோம்.அது மொத்தம் பதிவான வாக்குகளில் 34.9 சதவீதமாகும்.

ஆனால், 7 கட்சிகளைக் கொண்ட திமுக கூட்டணி 1.64 கோடி வாக்குகளைத் தான் பெற்றுள்ளது. நீக்கப்பட்டலட்சக்கணக்கான வாக்குளர்களும் வாக்களித்திருந்தால், திமுகவினரால் லட்சக்கணக்கான போலி வாக்காளர்கள்சேர்க்கப்படாமல் இருந்திருந்தால் அதிமுக அமோக வெற்றியைப் பெற்றிருக்கும்.

பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இதனை ஆராய்ந்து பார்க்காமல், மக்கள் அதிமுகவைஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிட்டதாக கற்பனை உலகிக் சஞ்சரித்து செய்திகளைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மைகள் மறைக்கப்படலாம்.. ஆனால், அதை யாரும் ஒழித்துவிட முடியாது.

இவ்வாறு ஜெயலலிதாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X