For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் பதவியேற்க சோனியா மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பிரதமராகப் பதவியேற்க விரும்பவில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஅறிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று மாலை மீண்டும் கூட்டணித் தலைவர்களின் கூட்டமும், புதிய காங்கிரஸ்எம்.பிக்களின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங் தேர்வுசெய்யப்படலாம் என்று தெரிகிறது.

சோனியாவின் பாதுகாப்பை மனதில் வைத்து அவர் பிரதமராக வேண்டாம் என பிரியங்காவும்,ராகுல் காந்தியும் தடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந் நிலையில், இன்று காலை சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்துகாங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைப்பது குறித்து விவாதித்தார். அப்போது பிரதமர் பதவிக்கு யார்நிறுத்தப்படுவார் என்பதை சோனியா தெரிவிக்கவில்லை.

மூத்த தலைவர் மன்மோகன் சிங்குடன் 12.15 மணிக்கு ராஷ்ட்ரபதி பவன் வந்த சோனியா சுமார் 20நிமிடங்கள் கலாமுடன் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய சோனியா,

அடுத்த அரசு அமைப்பது குறித்து ஆரம்பகட்ட பேச்சு நடத்தினோம். எங்களை எந்தெந்த கட்சிகள்கூட்டணியிலும், கூட்டணிக்கு வெளியிலும் ஆதரிக்கின்றன என்பதை கலாம் கேட்டறிந்தார்.

நாளை எங்களை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களின் கடிதங்களுடன் வந்துசந்திப்பதாக ஜனாதிபதியிடம் கூறிவிட்டு வந்துள்ளோம். நாளை மீண்டும் சந்திப்பு நடக்கும். அதன்பிறகு அடுத்த கட்டத்துக்கு நகர்வோம். புதிய அரசு பதவியேற்பு நிகழ்ச்சி விரைவில் நடக்கும்என்றார் சோனியா.

ஆனால், அடுத்த பிரதமர் யார் என்று கேட்டபோது, சிரித்தபடியே சென்றுவிட்டார். அவர் பதில்ஏதும் தெரிவிக்கவில்லை.

முன்னதாக இன்று காலை கலாமை சோனியா சந்திப்பது பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால்அவர் பிரதமராகப் பதவியேற்பாரா என்பதில் பெரும் சந்தேகம் ஏற்பட்டது. காலை 9.30 மணிக்குநடப்பதாக இருந்த இச் சந்திப்பு திடீரென 10.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர்காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டு திடீரென 12.15 மணிக்கு ராஷ்ட்ரபதி பவனுக்கு வந்தார்சோனியா.

தேர்தலில் அதிகபட்ச இடங்களைப் பிடித்த கட்சியின் தலைவர் என்ற முறையில் தன்னை வந்துசந்திக்குமாறு சோனியாவுக்கு அப்துல் கலாம் நேற்று மாலை கடிதம் அனுப்பியிருந்தார்.

இதைத் தொடர்ந்து திடீரென சோனியாவில் இல்லத்தில் நேற்றிரவு கூட்டணிக் கட்சிகளின் கூட்டம்அவசரமாகக் கூட்டப்பட்டது. அதில் திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

அப்போது, தான் பிரதமராக சங் பரிவார் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதால் வேறுஒருவரைப் பிரதமராக்கலாம் என்று சோனியா கூறினார்.

ஆனால், இதை கூட்டணிக் கட்சிகள் ஏற்கவில்லை. சங் பரிவாருக்கும் பா.ஜ.கவின்நெருக்குதலுக்கும் பணியக் கூடாது என கூறிவிட்டன. ஆனால், அதை முழுமையாக ஏற்காதசோனியா, அடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை ஜனாதிபதியை சந்தித்து உறுதியளிக்க மட்டும்ஒப்புக் கொண்டார்.

இதைத் தொடர்ந்தே இன்று கலாமை சோனியா சந்தித்தார்.

கலாமை சந்தித்துவிட்டுத் திரும்பிய சோனியா, கூட்டணித் தலைவர்களைத் தொடர்பு கொண்டு,பிரதமர் பதவியேற்பதில் தனக்கு விருப்பமில்லை என்பதை மீண்டும் தெரிவித்தார். இதையடுத்துகூட்டணித் தலைவர்களும் தங்களுக்குள் ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளனர்.

இன்று மாலை இந்தத் தலைவர்கள் மீண்டும் சோனியாவின் இல்லத்தில் சந்தித்துப் பேசவுள்ளனர்.அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதில்மன்மோகன் சிங் பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர்களான குலாம்நபி ஆசாத், அர்ஜூன் சிங்,முன்னாள் பிரதமர் விபி சிங், சமாஜ்வாடித் தலைவர் அமர்சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்சீதாராம் யெச்சூரி ஆகியோர் ஹர்கிசன்சிங் சுர்ஜித்தின் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

சோனியா பிரதமராக மாட்டார் என்ற தகவல் பரவியதும் ஆயிரக்கணக்கான காங்கிரசார் அவரதுஇல்லத்தின் முன் கூடி, பிரதமராகக் கோரி கோஷம் எழுப்பி வருகின்றனர். சிலர் தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாகவும் மிரட்டி வருகின்றனர்.

அதே போல சோனியா போட்டியிட்டு வென்ற ரே பரேலி தொகுதியிலும் காங்கிரசார் சோனியாவுக்குஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, மன்மோகனை பிரதமராக ஏற்பதில் தங்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை எனமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. அதே போலவே பிற கூட்டணிக் கட்சிகளும் சிங்பிரதமராக ஒப்புக் கொள்வர் என்றே தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X