For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

12ம் தேதி மேட்டூர் திறப்பு: ஜெ. அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் 12ம் தேதி முதல் தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்படும் என முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வரும் நிலையில், அணை திறப்பு குறித்துதமிழக அரசு அறிவிப்பு ஏதும் வெளியிடாமல் இருந்ததால் காவிரி டெல்டா விவசாயிகள்எரிச்சலில் இருந்தனர். சம்பா நெல் சாகுபடியைத் தொடங்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில்அவர்கள் ஆழந்து போயுள்ளனர்.

இந் நிலையில், அணையைத் திறக்கக் கோரி வரும் 9ம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில்மறியல் போராட்டங்கள் நடத்த அனைத்து எதிர்க் கட்சிகளும் முடிவு செய்திருந்தன.

இந் நிலையில் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சம்பா சாகுபடிக்காக, ஓரளவேனும் மேட்டூர் அணை நிரம்பாத நிலையில் அணையைத் திறந்தால், வட கிழக்குப்பருவமழை ஒரு வேளை தாமதமானால் சம்பா பயிர்கள் காய்ந்து விடும்.

இதனைத் தவிர்க்கவே ஓரளவேனும் அணை நிரம்பியதும் ஆகஸ்ட் மத்தியில் தண்ணீர் திறக்க முடிவுசெய்யப்பட்டது. தென் மேற்குப் பருவ காலத்தில் கிடைக்கும் மழையினால் வரும் காவிரி நீர் மற்றும் வட கிழக்குப்பருவ மழை ஆகியவற்றைப் பயன்படுத்தி சம்பா சாகுபடியை மேற்கொள்ள முடியும்.

வரும் 12ம் தேதி முதல் சம்பா சாகுபடிக்காக தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்.

காவிரி நீரை தமிழக அரசு திறந்து விடப் போகிறது என்பதைத் தெரிந்து கொண்டே எதிர்க் கட்சிகள் மறியல்போராட்டத்தை அறிவித்துள்ளன. கர்நாடகத்திடமிருந்து காவிரி நீரைப் பெற்றுத் தருவதில் எந்தவித ஆர்வம்,அக்கறையும் கொள்ளாத திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மேட்டூர் அணையைத்திறக்குமாறு கூக்குரலிடுவது வேடிக்கையானது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேட்டூர் நிரம்புகிறது:

இதற்கிடையே, கர்நாடகத்தில் பெய்யும் பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்துஅதிகரித்தவண்ணம் உள்ளது. கபினி அணையில் மொத்த கொள்ளளவான 2,284 அடியும்நிரம்பிவிட்டது. இதனால் வினாடிக்கு 41,417 கன அடி நீர் மேட்டூருக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.

அதே போல மைசூர் கிருஷ்ணராஜ சாகரில் மொத்த கொள்ளளவான 124.80 அடியில் 115 அடிநிரம்பிவிட்டது. இதனால் வினாடிக்கு 4,300 கன அடி நீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

இப்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 39,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின்நீர் மட்டம் நேற்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து, இப்போது 82.63 அடி நீர் உள்ளது. அணையின்கொள்ளளவு 120 அடியாகும்.

கர்நாடகத்தில் இருந்து திறந்து விடப்படும் நீர் காரணமாக ஒகேனக்கலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Okenakal

ஓகேனகல்லில் கொட்டும் காவிரி வெள்ளம்
இதற்கிடையே, காவிரி டெல்டா மாவட்டங்களிலும் திடீர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ஓரத்தநாட்டில் 3செமீ மழையும், நீடாமங்கலம், தஞ்சாவூரில் தலா 2 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

முன்னதாக மேட்டூர் அணையைத் திறக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த மூன்றாண்டுகளாக தொடர் வறட்சியால் காவிரிப் பாசனப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.இந் நிலையில் இந்த ஆண்டில் மேட்டூர் அணையில் தண்ணீர் மட்டம் போதுமான அளவுஉயர்ந்துள்ளது. ஆனாலும் பாசனத்துக்கு நீரைத் திறந்து விட தமிழக அரசு முன் வரவில்லை.

இதை எதிர்த்து 9ம் தேதி டெல்டா மாவட்டங்களில் பெரும் மறியல் போராட்டம் நடக்கும் என்று கூறியிருந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X