வழக்கறிஞர்கள் சட்ட திருத்தம் வாபஸ் இல்லை: சுபாஷன்
சென்னை:
வழக்கறிஞர்களுக்கான சட்ட திருத்தத்தை வாபஸ் பெற மாட்டேன் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமைநீதிபதி சுபாஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர்களின் ஒழுக்கம், நடவடிக்கை ஆகியவற்றை வரைமுறைப்படுத்த கடந்த மாதம் 30ம் தேதி ஒரு சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது. இச் சட்ட திருத்தத்தின்படி நீதிமன்ற புறக்கணிப்பு, உண்ணாவிரதம், போராட்டம்ஆகியவற்றில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் 1 ஆண்டு நீதிமன்றத்துக்குச் செல்ல தடை விதிக்கப்படும்.
இந்த சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந் நிலையில்இந்த சட்ட திருத்தத்தை வாபஸ் பெற மாட்டேன் என்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி இன்று தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி தொடர்பான வழக்கு ஒன்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி அசோக்குமார்ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சட்ட திருத்தம் தொடர்பாக எழுந்தவிவாதத்தில் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றப் புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபடுகிறார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்அடிப்படையில்தான் வழக்கறிஞர்களுக்கான சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்தேன். எனவே இதை வாபஸ் பெறமாட்டேன்.
போராட்டம் என்ற பெயரில் சில வழக்கறிஞர்கள் ரவுடித்தனம் செய்கிறார்கள். பெண் வழக்கறிஞர்களின்சேலையை பிடித்து இழுக்கிறார்கள். இவற்றை எல்லாம் நான் கட்டுப்படுத்தாவிட்டால் தலைமை நீதிபதியாக இருக்கஎனக்குத் தகுதி இல்லை. ஏற்கனவே, பேச்சு நடத்த சென்ற நீதிபதி தினகரனை வழக்கறிஞர்கள் அவமானப்படுத்திஉள்ளனர் என்றார்.
வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை:
முன்னதாக, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஊர்வலம், உண்ணாவிரதம், கோஷமிடும் வழக்கறிஞர்கள்மீது சட்டப்படியான கடும் நடவடிக்கையை எடுக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு தலைமை நீதிபதிசுபாஷன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில்ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில், வழக்கறிஞர் கருப்பன் தலைமையில் வழக்கறிஞர்கள்நீதிமன்ற வளாகத்தில்ஊர்வலமாக சென்றனர்.
தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி அறை முன்பு நின்று கொண்டு அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றுகோரி கோஷமிட்டனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து ரெட்டிக்கு எதிராககோஷமிட்டனர்.
இந்தச் சூழ்நிலையில் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, மாநகர காவல்துறை ஆணையர் நடராஜனைவரவழைத்தார். அவருடன் நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஏராளமான போலீஸாரைக் குவிக்க உத்தரவிட்டார். மேலும், உயர்நீதிமன்றவளாகத்திற்குள் எந்தவித அசம்பாவித, வன்முறைச் சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு நடராஜனுக்குஉத்தரவிட்டார்.
அதேபோல, உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஊர்வலம் நடத்துவது, கோஷம் போடுவது, பணிக்கு செல்லும்வழக்கறிஞர்களைத் தடுப்பது, உண்ணாவிரதம் இருப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபடுவோர் மீது தயவுதாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்குமாறும் காவல்துறை ஆணையருக்கு சுபாஷன் ரெட்டிஉத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற புறக்கணிப்பு:
இதற்கிடையே வழக்கறிஞர்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரியும், கரூர், தஞ்சை, திருச்சி உள்ளிட்டமாவட்டங்களை மதுரை உச்ச நீதிமன்றக் கிளையுடன் இணைக்கக் கோரியும் மதுரை, தஞ்சை,கரூர், மாவட்டவழக்கறிஞர்கள் இன்று 4 வது நாளாக நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications