For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்துல் கலாமை அசத்திய கீரப்பாளையம்

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று தனது பிறந்த ஊரான ராமேஸ்வரம் வந்தார்.

மண்டபத்தில் அமைக்கப்பட்ட ஹெலிபேடில் கலாமின் ஹெலிகாப்டர் இறங்கிய சிறிது நேரத்தில் அருகில் இருந்தகுடிசைகளில் தீப் பிடித்தது. இதில் 50 குடிசைகள் எரிந்து நாசமாகிவிட்டன. இதனால் அங்கு பெரும் பதற்றம்நிலவியது.

இன்று பகல் 12.10 மணிக்கு கலாமின் ஹெலிகாப்டர் அங்கு இறங்கியது. பின்னர் அவர் காரில் ராமேஸ்வரம்கிளம்பினார்.

அடுத்த சில நிமிடங்களில் ஒரு குடிசையில் தீப் பிடித்துக் கொண்டது. கடல் காற்றில் வேகமாக 50 குடிசைகளுக்கும்தீ பரவியது. ஹெலிபேடில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இந்தக் குடிசைகள் உள்ளன.

ஹெலிபேடில் நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு வண்டிகள் விரைந்து தீயை அணைத்தன. இதில் யாரும்காயமடையவில்லை. ஜனாதிபதியைப் பார்ப்பதற்காக அடுப்பையும் சமையல் வேலைகளையும் குடிசைவாசிகள்அப்படியே விட்டுவிட்டு வந்ததாகவும், அதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

ஜனாதிபதியுடன் வந்த அமைச்சர் நயினார் நாகேந்திரன் உடனே அங்கு விரைந்து தீயில் எரிந்த குடிசைகளைச்சேர்ந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 2,000 வழங்கி, ஆறுதல் கூறினார்.

குடந்தை குழந்தைகளுக்கு நினைவிடம்:

கும்கோணத்தில் ஏற்பட்ட பள்ளித் தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளின் நினைவாக ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்றுகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

நேற்று கும்பகோணம் சென்ற அப்துல் கலாம், கிருஷ்ணா பள்ளித் தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல்கூறினார். மேலும், காயமடைந்து மீண்டுள்ள 15 குழந்தைளுடன் அவர் ஆறுதலாகப் பேசினார்.

ஜி.ஏ.சி. அரங்கத்தில் நடந்த இந்த சந்திப்பு மிகவும் உணர்ச்சிமயமானதாக இருந்தது. அரங்கத்துக்குள் நுழைந்தவுடனேயே மேடை ஏறாமல்,அங்கு வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்த பெற்றோரை ஒவ்வொருவராகச் சென்று சந்தித்துப் பேசினார்.

அப்போது பல பெற்றோர்கள் கண் கலங்க, அவர்களுக்கு ஆறுதல் சொன்னார். சகோதர, சகோதரிகளைப் பலி கொடுத்துவிட்டகுழந்தைகளிடம் நம்பிக்கை தரும் விதத்தில் அவர் பேசினார். நடந்து விட்ட சோகத்தை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து, இருக்கும்குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, அவர்களின் கனவுகளை நனவாக்க பாடுபாடுமாறு பெற்றோர்களை கலாம் கேட்டுக்கொண்டார்.

மேலும் விபத்தில் காயமடைந்த குழந்தைகளுக்கு எந்தவிதமான மேல் சிகிச்சையும் அளிக்க உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியகலாம், பின்னர் கலெக்டர் ராதாகிருஷ்ணனுடனும் ஆலோசனை நடத்தினார்.

சுமார் 45 நிமிடங்கள் அங்கு செலவிட்ட கலாம், தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் நினைவாக ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்என ராதாகிருஷ்ணனிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

அதற்கு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் கூறியுள்ளார். பின்னர் திருச்சி திரும்பிய கலாம் அரசு சுற்றுலாமாளிகையில் தங்கினார்.

கலாமை அசர வைத்த மாதிரி கிராமம்:

இன்று அவர் காலை ஹெலிகாப்டரில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கீரப்பாளையம் கிராமத்துக்குச் சென்றார். அங்கு கிராம மக்கள் மத்தியில்அவர் பேசுகையில்,

சில மாதங்களுக்கு முன் உங்கள் கிராமத்தைச் சேர்ந்த குழு வட இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்தபோதுடெல்லியில் என்னைச் சந்தித்தது. அப்போது கீரப்பாளையம் கிராமம் எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்று செயல்படுவதைஉங்கள் பஞ்சாயத்துத் தலைவர் பன்னீர்செல்வம் என்னிடம் தெரிவித்தார்.

அந்த அற்புத கிராமத்தை காண நான் வருவேன் என்று பன்னீர்செல்வத்திடம் கூறியிருந்தேன். அதன்படி இங்கு வந்து உங்களைச் சந்திப்பதில்பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த கிராமத்தில் 1125 வீடுகளிலும் கழிப்பறை, சுகாதார வசதிகள் இருப்பதாக அறிகிறேன். இது மிக நல்ல செய்தி. கிராமங்களில்அடிப்படை வசதிகளும் வேலை வாய்ப்புக்களும் அதிகரிக்கப்பட வேண்டும். வாழ்க்கையின் அழகு கிராமங்களில் தான் இருக்கிறது.

கிராமங்களில் விவசாயத் தொழில்துறையையும் கைத்தறித் தொழில்துறையையும் ஊக்குவிக்க முதலில் நல்ல சாலைகள் அமைக்கப்பட்டு,கிராமங்கள் பக்கத்து நகரங்களோடு இணைக்கப்பட வேண்டும். பள்ளிகள், மருத்துவமனைகளை கிராமங்களில் அதிகரிக்க வேண்டும்.இன்டர்நெட் உள்ளிட்ட மின்னணுவியல் இணைப்புகள் மூலம் நம் கிராமங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்துவிட முடியும்.

இதற்கான ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் நாட்டின் 6 லட்சம் கிராமங்களை 7,000 காம்ப்ளெக்களுக்குள் உள்ளடக்கி,அந்த காம்ப்கெளக்ஸை தொழில்ரீதியில் வளரச் செய்யும் திட்டம் அது. அதில் மக்களின் பங்கேற்பு மிக அவசியம்.

இதைச் சொல்லும்போது என ஒவ்வையார் எழுதிய பாடலே நினைவுக்கு வருகிறது.

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்
கோல் உயர கோமான் உயர்வான்

ஒரு நாடு உயர கிராமங்களில் வளர்ச்சி மிக, மிக அவசியம். கிராமங்கள் செழிப்படைந்தால் தான் நாடு செழிக்கமுடியும் என்றார் கலாம்.

இந் நிகழ்ச்சிக்குப் பின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது தானும் ஜன கன மண பாடியதோடு தன்னோடுநிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் தேசிய கீதம் பாட வைத்தார் கலாம்.

இந்த கிராமத்தில் படிக்காத குழந்தைகளே இல்லையாம். மேலும் முதியோருக்கும் கல்வி அளிக்கப்படுகிறது. நரிக்குறவர்களுக்கும் கல்வி கற்க ஏற்பாடு செய்துள்ளது இந்த கிராம பஞ்சாயத்து. கிராமம் முழுவதுமே தார் சாலைகள்,தெரு விளக்குகள், குடிநீர் வசதி, வீட்டில் கழிவறை இல்லாதவர்களுக்கு பொதுவான கழிவறைகள், அதில் குழாய் நீர்வசதி என வெளிநாட்டு கிராமம் மாதிரி திகழ்கிறது.

குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் கிராமம் அதை தங்களது நிலங்களுக்கு பயன்படுத்துகிறது. ஊருக்குபொதுவாக ஒரு திருமண மண்டபமும் கட்டி வைத்துள்ளார்கள். நிலத்தடி நீர் வளத்தை காக்கும் வகையில்மரங்களை நட்டும், ஏரிகளைத் தூர் வாரியும் கச்சிதமாக வைத்துள்ளார்கள்.

மனித கழிவில் இருந்து பயோ கேஸ் தயாரித்து வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள்.

எல்லாவற்றுக்கும் அரசை நம்பியிருக்காமல் தங்களது சுய முயற்சியால் எழுந்து நின்றிருக்கிறது இந்த கிராமம்.அதற்கு பஞ்சாயத்துத் தலைவர் பன்னீர்செல்வத்தின் வழிகாட்டுதல் மிக அதிகமாம். இந்த கிராமம் குறித்துடெல்லியில் தன்னைச் சந்தித்த பன்னீர்செல்வத்தின் வாயால் கேட்டறிந்த ஜனாதிபதி அப்துல் கலாம், நான் அந்தகிராமத்தைப் பார்க்க வேண்டும் என்று பரபரத்தாராம்.

விரைவில் நான் அங்கு வருவேன் என்று உறுதியளித்து அனுப்பினாராம்.

இதைத் தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பவள விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலாம் பின்னர் ஹெலிகாப்டரில் தனதுசொந்த ஊரான ராமேஸ்வரத்துக்குச் சென்றார்.

இன்று வெள்ளிக்கிழமையாததால் பள்ளிவாசலில் தொழுகைக்குச் சென்றார். அப்போது அவரை முதல் வரிசையில் வந்து நிற்குமாறு சிலர்சொல்ல, இறைவனுக்கு முன் அனைவரும் சமம். இறைவனின் இல்லத்தில் என்னைப் பாராட்டாதீர்கள், இறைவனை மட்டுமே பாராட்டுங்கள்என்றார்.

பின்னர் பிறருடன் நடு வரிசையில் நின்றே தொழுதார். பின்னர் திருக்குரானில் இருந்து ஒரு வசனத்தை கலாம் படிக்க, மற்றவர்களும் அதைத்திருப்பிச் சொன்னார்கள்.

இதன் பின்னர் மீனவர் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் கலாம். அப்போது இலங்கை-இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சனையைமுடிவுக்குக் கொண்டு வர உதவுமாறு அவரிடம் மீனவர்கள் மனு கொடுத்தனர்.

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி விழா:

பின்னர் ஹெலிகாப்டரில் மதுரை வரும் கலாம், லேடி டோக் பெண்கள் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.பின்னர் மதுரை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X