• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என் வாழ்க்கையை படமாக்க கூடாது: ஜெயலட்சுமி

By Staff
|

Jayalakshmiமதுரை:

எனது வாழ்க்கையை யாரும் சினிமாவாக எடுக்கக் கூடாது. மீறி எடுத்தால் வழக்கு தொடர்வேன் என்று செக்ஸ்ஜெயலட்சுமி கூறியுள்ளார்.

ஜெயலட்சுமியின் கதையை நிறம் மாறிய ரோஜாக்கள் என்ற பெயரில் படமாக்க முயற்சி நடந்து வருகிறது.ஜெயலட்சுமியாக விந்தியா நடிக்கப் போகிறாராம்.

அதே போல கிரைம் லேடி என்ற பெயரில் மும்தாஜை வைத்து குஜால் படமாக எடுக்கவும் தமிழ்த் திரையுலகினர்முயன்று வருகின்றனர். இந் நிலையில் மதுரையில் நிருபர்களிடம் பேசிய ஜெயலட்சுமி கூறியதாவது:

இந்த வழக்கை முடக்க ஒரு போலீஸ்காரர் மூலம் பேரம் பேசி என்னை மடக்கப் பார்க்கிறார்கள். பட்டதெல்லாம்போதும்; இனி யாருடைய ஆசை வார்த்தைகளுக்கும் மசியப் போவதில்லை.

எனக்கு ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி ஜாமீன் கிடைக்காமல் நான் ஜெயிலுக்குப்போனால், நான் பிணமாகத்தான் திரும்ப வேண்டியிருக்கும். ஏனென்றால் என்னை சீரழித்த போலீஸ்காரர்கள்ஜெயிலிலேயே தீர்த்துக் கட்டி விடுவார்கள்.

Jayalakshmiஅரசு பெண்கள் காப்பகத்தில் எனது செக்ஸ் அனுபவத்தைக் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். அருப்புக்கோட்டைஅருகே உள்ள ஒரு ஊரைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அடிக்கடி இங்கு வந்து, எனது செக்ஸ் அனுபவத்தை சொல்லச்சொல்லி தொந்தரவு செய்கிறார்.

இவர்களுக்குப் பதில் சொல்வதை விட தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. எனதுபாதுகாப்புக்காக வந்திருக்கும் பெண் போலீஸ் அதிகாரி, நானும் எனது வழக்கறிஞர்களும் பேசுவதை அப்படியேஇன்ஸ்பெக்டர் இளங்கோவனிடம் போய் சொல்லி விடுகிறார்.

எனது வாழ்க்கையை யாரோ சினிமாவாக எடுக்கப் போவதாக கேள்விப்பட்டேன். என் வாழ்க்கையை யாரும்படம் எடுக்கக்கூடாது என்று வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்ப சொல்லி இருக்கிறேன். அதையும் மீறிபடம் எடுத்தால் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்.

இப்போது எனக்கு குழந்தைகள் ஞாபகம் அதிகம் வருகிறது. குழந்தைகளைப் பார்க்கவும், அவர்களைக்கொஞ்சவும் ஆசையாக இருக்கிறது. இதை எனது வழக்கறிஞர்களிடம் கூறியிருக்கிறேன். எனது ஆசைநிறைவேறுமா எனத் தெரியவில்லை என்று கூறினார்.

மேலும் ஒரு அதிகாரி சஸ்பெண்ட்

இந் நிலையில் ஜெயலட்சுமி விவகாரத்தில் தொடர்புடைய செக்ஸ் வெறியரான இன்ஸ்பெக்டர் மலைச்சாமிதற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகாசி கில்லாடிப் பெண் ஜெயலட்சுமி மதுரை உயர்நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் 21 போலீஸ்அதிகாரிகள் தன்னை சீரழித்த விவகாரம் குறித்துக் கூறியிருந்தார். இந் நிலையில், நேற்று இந்த 21 பேரையும்இரண்டு பிரிவாகப் பிரித்து ஒரு மனுவை நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி தாக்கல் செய்தார்.

Jayalakshmi and Malaisamyதனக்கு தனிப்பட்ட முறையில் கொடுமை இழைத்தவர்கள், தங்களது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி கொடுமைசெய்தவர்கள் என இரண்டு லிஸ்டாகப் பிரித்து புதிய பட்டியலைத் தந்துள்ளார்.

ஜெயலட்சுமியின் இந்த இரண்டு பட்டியல்களிலும் முக்கிய இடம் பெற்றுள்ள இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தாற்காலிகபணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். முதலில் இவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டிருந்தார். இந் நிலையில், நேற்றுஇரவு மலைச்சாமியின் மதுரை ஆத்திகுளம் வீட்டில் சஸ்பெண்ட் உத்தரவு வழங்கப்பட்டது.

ஜெயலட்சுமி சொகுசுக் கார் வாங்குவதற்காக வங்கி ஒன்றில் கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொகைக்கானகியாரண்டராக மலைச்சாமி கையெழுத்துப் போட்டிருந்தார். மேலும், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னைமிரட்டி, அடைத்து கொடுமைப்படுத்தியதாகவும் ம(செக்ஸ் கொடுமை உள்பட) மலைச்சாமி மீது ஜெயலட்சுமி புகார்கூறியுள்ளார்.

செக்ஸ் வெறியரான மலைச்சாமி, ஜெயலட்சுமியை சென்னைக்குக் காரில் அழைத்துப் போய் ஒரு வாரம் லாட்ஜில்ரூம் போட்டு லீலைகளை நடத்தியவர். மகா மட்டமான அதிகாரி என எல்லா இடத்திலும் பெயர் வாங்கியவர்.

ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி:

இதற்கிடையே ஜெயலட்சுமி விவகாரத்தில் சிக்கிய மதுரை திடீர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன்,சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டு கண்ணன், போலீஸ்காரர் முருகவேல் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள்தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

இதில் இளங்கோவன் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X