For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏப். 14ல் அரசியல் பிரவேசம்: விஜயகாந்த்

By Staff
Google Oneindia Tamil News

வரும் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி அரசியலில் ஈடுபடுவது பற்றி அறிவிப்பேன் என்றும் அடுத்த தேர்தலில் என் மன்றத்தை சேர்ந்தவர்கள்போட்டியிடுவார்கள் என்றும் நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:

Vijaykanth(படம் ரிலீசுக்கு முன் ஏதாவது பரபரப்பு அறிவிப்பு வெளியிடும் நடிகர்களில் முக்கியமானவரான விஜய்காந்தின் சொந்த தயாரிப்பானநெறஞ்ச மனசு படம் விரைவில் வெளியாக உள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டு இந்த பேட்டியைப் படிக்கவும்)

எனது அரசியல் பிரவேசம் பற்றி வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி அறிவிப்பேன். தேர்தல் நேரத்தில் தீவிர அரசியல் பற்றிய அறிவிப்புவெளியிடுவேன். அதுவரை ஊறுகாயை தொடுவதுபோல் என் படங்களில் அரசியல் வசனங்கள் நிச்சயம் இடம் பெறும்.

கடந்த பஞ்சாயத்து தேர்தலில், எனது ரசிகர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றதுபோல், அடுத்த பொதுதேர்தலிலும் போட்டியிடுவார்கள்.

கஜேந்திரா எனது 145-வது படம். தெலுங்கில் சிம்மாத்ரி என்ற பெயரில் சூப்பர் ஹிட்டான படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை நான்வாங்கி வைத்திருந்தேன். அந்த நேரத்தில் தயாரிப்பாளர் வி.ஏ. துரை என்னிடம் வந்து, அந்தப் படத்தை தானே தயாரிப்பதாக சொன்னார்.

தயாரிப்பில் இருந்தபோது சில பிரச்சினைகள் உண்டாயின. என் மைத்துனர் சுதீஷ் உள்பட பல தயாரிப்பாளர்கள் உட்கார்ந்து பேசி,பிரச்சினைகளை தீர்த்து, படம் வெளிவர உதவினார்கள்.

கஜேந்திரா என்பது விநாயகரின் பெயர். அதனால் விநாயகர் சதுர்த்தி அன்று படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில்,விநியோகஸ்தர்கள் உறுதியாக இருந்தார்கள். நான் நடித்த படங்களில் அதிக பிரிண்ட் போடப்பட்ட படம் இதுதான். இந்த படத்தில் ஏற்பட்டபிரச்சினைகள் குறித்து நான் இப்போது விளக்கம் அளிக்க விரும்பவில்லை. தேவைப்பட்டால் நிச்சயம் விளக்கம் அளிப்பேன்.

படத்தில் எந்த வசனமும் நீக்கப்படவில்லை. இரட்டை அர்த்தம், ரத்த சேதாரம் காரணமாக சென்சாரில் 6 இடங்களில் கட் கொடுத்தார்கள்.கேப்டன் பிரபாகரன், வல்லரசு மாதிரி கஜேந்திராவும் வெற்றி பெறும் என்று கூறினார் விஜயகாந்த்.

திருச்சி வினியோகஸ்தர்கள் தடை

இதற்கிடையே கஜேந்திரா படம் ஒரு வழியாக வெளியாகியுள்ள நிலையில், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டனம் மாவட்டங்களில் இப்படம்திரையிடப்படவில்லை.

தயாரிப்பாளர் துரையுடன் விஜயகாந்த்துக்கு ஏற்பட்ட சம்பளப் பிரச்சினையும், தயாரிப்பாளருக்கும், பைனான்சியருக்கும் ஏற்பட்ட பிரச்சினையும் முடிந்த நிலையில்,கஜேந்திரா படம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

ஆனால் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டனம் ஆகிய மாவட்டங்களில் இப்படம் திரையிடப்படவில்லை. கஜேந்திரா பட வெளியீடு குறித்துதங்களுக்கு தயாரிப்பாளர் தரப்பு முறைப்படி தெரிவிக்கவில்லை.

இதனால் எங்களது அதிருப்தியைக் காட்டும் வகையில் படத்தைத் திரையிடவில்லை என்று வினியோகஸ்தர்கள் தரப்பு கூறியுள்ளது.

தயாரிப்பாளர் தங்களிடம் மன்னிப்பு கேட்கும் வரையில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டனம் ஆகிய வினியோக ஏயாவுக்கு உட்பட்ட 7மாவட்டங்களில் கஜேந்திராவைத் திரையிட தடை விதித்துள்ளோம் என்றும் வினியோகஸ்தர் சங்கம் கூறியுள்ளது.

இவர்களின் பின்னணியில் விஜய்காந்த் இருப்பதாக தயாரிப்பாளர் தரப்பு முனுமுனுக்கிறது.

பா.ம.க. தலைவர் ராமதாசிடம் சமாதானம் பேசிய பின்னரே இந்தப் படத்தை தயாரிப்பாளர் துரை வெளியிட முடிந்தது. இதன்மூலம் தனது மானத்தைராமதாசிடம் துரை அடமானம் வைத்துவிட்டதாக நினைக்கிறார் விஜய்காந்த்.

இதனால் இந்தப் படத்தையே திரையிட விடாமல் துரைக்கு பல நெருக்கடிகளை தந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X