For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓ.பன்னீர்செல்வத்தை 3 முறை சந்தித்தேன்: ஜெயலட்சுமி

By Staff
Google Oneindia Tamil News

Jayalakshmiஅமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை 3 முறை சந்தித்திருப்பதாக ஜெயலட்சுமி கூறியிருக்கிறார்.

இந்தியா டுடே இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி விவரம்:

நான் டர்க்கி டவல் பிசினஸ் செய்து கொண்டிருந்தேன். அது சம்பந்தமாக தெரிந்தவர் மூலமாக டி.எஸ்.பி. ராஜசேகரை சந்தித்தேன். தொடர்சந்திப்பின் விளைவாக நாங்கள் இருவரும் 2002 ஜனவரி 27ம் தேதி திருச்செந்தூரில் திருமணம் செய்து கொண்டோம். அதுதான்வாழ்க்கையில் இந்த இடத்தில் என்னைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டது.

டி.எஸ்.பி. ராஜசேகர் பெயரைச் சொல்லிக் கொண்டு நிறைய பேரிடம் நான் பணம் வாங்கியதாக தகவல்கள் மீடியாக்களில் வந்தன. ஆனால்அவர்தான் அவருடைய பண விவகாரங்களுக்காக என்னைப் பயன்படுத்திக் கொண்டார். அவர் மனைவி என்பதால் வீட்டில் வந்து நிறையபேர் பணம் கொடுப்பார்கள். நிறைய பேரிடம் வேலை மாற்றுதலுக்காக எனக்குத் தெரிந்து பணம் வாங்கியிருக்கிறார். அவர் எந்தவேலையையும் முடித்துத் தராததால் பணம் கொடுத்தவர்கள் என்னை நெருக்கினார்கள்.

அப்போது நான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் பண்ண ஆரம்பித்தேன். டி.எஸ்.பி. கனகராஜ் பரிந்துரைத்ததால் நிறைய இன்ஸ்பெக்டர்கள்மற்றும் காவல்துறையினர் என்னிடம் மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் சேர்ந்தனர். அப்போதுதான் இளங்கோவனும் மலைச்சாமியும்பழக்கம்.

அவர்கள் இருவரும் சேர்ந்து நிறைய காரியம் செய்திருக்கிறார்கள். என்னை பணம் வாங்கி வரச் சொல்லி பல இடங்களுக்குஅனுப்புவார்கள். டிசம்பர் 16, 2003ல் கரூரிலுள்ள கந்தா பைனான்ஸூக்கு என்னை அனுப்பி ஒரு லட்சம் ரூபாய் வாங்கினார்கள். எனக்குத்தெரிந்து மலைச்சாமி இப்படி ரூ.30 லட்சம் வரை வாங்கியிருக்கிறார்.

மதுரை திருநகரில் சமீபத்தில் ஒரு கொலை நடந்தது. அதில் சம்பந்தப்பட்ட ஐயப்பன், ரவி என்பவர்களை விடுவிக்க என் கண்ணெதிரிலேயேமலைச்சாமி ரூ.10 லட்சம் வாங்கினார். மலைச்சாமி அவார்டு வாங்க சென்னை வந்திருந்தபோது நானும் வந்திருந்தேன். 3 நாட்களுக்குஎங்களுக்கு ரூம் போட்டுக் கொடுத்ததே ஐயப்பன், ரவி இரண்டு பேரும்தான்.

இளங்கோவன், மலைச்சாமி என்னுடன் தொடர்பு வைத்திருந்தது அவர்களுடைய மேலதிகாரிகளுக்குத் தெரியும். ஆனால் நடவடிக்கைஎடுக்கவில்லை. நான் போலீஸ் யூனிபார்மில் சென்று நிறைய பேரை ஏமாற்றிப் பணம் பறித்ததாக சொல்லப்படுகிறது. என்னை போலீஸ்டிரஸ் போட வைத்ததே அவர்கள்தான்.

பாளையங்கோட்டையிலிருந்து தடா கைதிகளை சென்னைக்குக் கொண்டு போகும்போது அவரது ஜீப்பில் என்னையும் சென்னைக்குஅழைத்துப் போனார் டிஎஸ்பி ராஜசேகர். கோவை குண்டுவெடிப்பு வழக்கின் கைதியை அவர் அழைத்துப் போகும்போதும் நானும்போனேன்.

பாளையங்கோட்டை ஆயுதப்படை ஜிப்சி வண்டியில்தான் டிரைவிங் கற்றுக் கொண்டேன். அந்த வண்டி என்னிடம் ஒரு வருடம் இருந்தது.டிபார்ட்மெண்ட் ரிவால்வரை என் பாதுகாப்புக்காக 10 நாட்கள் கொடுத்தார் ராஜசேகர். ஏட்டு கண்ணன் எனக்காக முழு நேரமும் கார்ஓட்டினார். இதெல்லாம் அவர்களாகவே கொடுத்ததுதான்.

இப்போது அபிடவிட்டில் சொல்லியது தவிர இன்ஸ்பெக்டர் வேலன், பிச்சை இன்னும் பலரைப் பற்றியும் சிபிஐ விசாரணையில்சொல்வேன்.

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை 3 முறை சந்தித்திருக்கிறேன். அவர் முதல்வராக பதவியேற்ற 20 நாட்களுக்குள்ளாக ராஜசேகருடன் சென்றுகோட்டையில் சந்தித்தேன். அப்போது ராஜசேகர் திண்டுக்கல் டி.எஸ்.பி. இருந்தார். ஒரு சூட்கேஸில் பணத்தை எடுத்துக் கொண்டு போய்பன்னீர்செல்வத்திடம் கொடுத்தோம். எவ்வளவு பணம், எதற்காக கொடுக்கப்பட்டது என்பது எல்லாம் எனக்குத் தெரியாது.

இரண்டாவது முறையும் ராஜசேகருடன் விஐபி சூட்கேஸில் வைத்து பணத்தை எடுத்துக் கொண்டுபோய் ஓ.பியிடம் கொடுத்தோம். இதுநடந்தது 2002 ஆடி மாதம் என்று நினைக்கிறேன். பன்னீர் செல்வம் அதை வாங்கும்போது நான் எதிரில்தான் அமர்ந்திருந்தேன்.

அப்புறம் ஒரு தடவை ராஜசேகர் என்னிடம், பன்னீர் செல்வம் உன்னை வரச் சொன்னார். திருச்சியிலிருந்து அவரோட ஆட்கள் வந்துஉன்னை கூப்பிட்டுக் கொண்டு போவார்கள் என்று சொல்லி திண்டுக்கல்லிருந்து திருச்சிக்கு டிரெயினில் அனுப்பி வைத்தார். நான் திருச்சிபஸ் ஸ்டாண்டிலுள்ள கல்பனா லாட்ஜில் தங்கியிருந்தேன். ஆனால் அந்த முறை பன்னீர் செல்வத்தைப் பார்க்க முடியவில்லை.

பன்னீர் செல்வம் 2004 தேர்தல் சமயத்தில் மதுரையில் தங்கியிருந்தபோது அவருக்கு ரூம் போட்டுக் கொடுத்து பார்த்துக் கொண்டதுஇளங்கோவன்தான். என்னை இங்கோவன் கடத்தப் போகிற விஷயம் கூட ஒரு வேளை பன்னீர் செல்வத்துக்கு முன்பே தெரிந்திருக்கலாம்.

பன்னீர் செல்ஜத்தை சந்தித்தபோது என்ன பேசினோம் என்பதைப் பற்றியெல்லாம் சிபிஐ விசாரணையில் தெரிவிப்பேன். அவரைசந்தித்ததுக்கு ஆதாரம் இருக்கிறது. இதையும் சிபிஐ விசாரணையின்போது சமர்பிப்பேன்.

இவ்வாறு ஜெயலட்சுமி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X