For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிரிக்கெட் வாரிய தேர்தலுக்கு கோர்ட் அனுமதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கொல்கத்தாவில் இன்றும், நாளையும் நடைபெறவிருந்த இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக் குழுக் கூட்டம் மற்றும்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த நேதாஜி கிரிக்கெட் கிளப் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்யப்பட்டது. அந்த மனுவில், கொல்கத்தாவில் நடைபெறவுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர்பதவிக்கான தேர்தல், பொதுக்குழுக் கூட்டம் ஆகியவற்றில் எந்தவிதத்திலும் தலையிட தற்போதைய தலைவர்ஜக்மோகன் டால்மியாவுக்குத் தடை விதிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையின் கீழ் தேர்தல் நடைபெறஉத்தரவிட வேண்டும். அவருக்கே தேர்தலை நடத்தவும், கண்காணிக்கவும் முழு அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி அசோக்குமார் விசாரித்தார். விசாரணைக்குப் பின், கிரிக்கெட் வாரியத் தேர்தலில்ஜக்மோகன் டால்மியா தலையிடத் தடை விதித்தார். மேலும், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் இந்ததேர்தலை நடத்தும் ஆணையராக இருப்பார்.

தேர்தலில் போட்டியிடுவோரின் தகுதிகள் குறித்தும், ஓட்டுப் போடுவோரின் தகுதிகள் குறித்தும் கிரிக்கெட் வாரியசட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்கும் அதிகாரம் மோகனுக்கு வழங்கப்படுகிறது.

தேர்தல் யார் ஓட்டுப் போடலாம், யார் ஓட்டுப் போடக் கூடாது என்பதை முடிவு செய்யும் உரிமை மோகனுக்குவழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டார். இதனை எதிர்த்து கிரிக்கெட் வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தினகரன் மற்றும் நீதிபதி ரவிராஜ பாண்டியன் ஆகியோர்அடங்கிய டிவிஷன் பெஞ்ச், நீதிபதி மோகன் நியமனத்தை ரத்து செய்ததோடு, கிரிக்கெட் வாரியத்தின்விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்தலை நடத்தவும் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் தனது தீர்ப்பில், நீதிபதி மோகன் நியமனம் ரத்து செய்யப்பட்டாலும், அவர் கொல்கத்தாவை விட்டுபுறப்படும் வரை அவருக்கு உரிய மரியாதையையும், வசதிகளையும் கிரிக்கெட் வாரியம் செய்து தர வேண்டும்.அதேபோல் அவருக்கு தர வேண்டிய ரூ.1 லட்சத்தையும் கிரிக்கெட் வாரியம் தர வேண்டும்.

இந்த தீர்ப்பை எதிர்த்து கிரிக்கெட் வாரியம் மேல்முறையீடு செய்யலாம் என்று நீதிபதிகள் கூறினர்.

இன்று காலை 11 மணிக்கு நடைபெறுவதாக இருந்த கிரிக்கெட் வாரிய பொதுக்கூட்டம் மற்றும் தேர்தல்ஆகியவை முதலில் 2.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதனையடுத்து 4 மணிக்கும், பின்பு 5 மணிக்கும் கூட்டம்ஒத்தி வைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் கிடைத்த பின்பே கூட்டம் நடத்தப்படும் என்றுதெரிவிக்கப்பட்டது.

கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு மத்திய அமைச்சர் சரத்பவாரும், தற்போதைய தலைவர் ஜக்மோகன்டால்மியாவின் ஆதரவு பெற்ற வேட்பாளர் மகேந்திராவும் போட்டியிடுகின்றனர். பவாருக்கு காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் போட்டியலிருந்து சரத் பவார் விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்தன. இதனை சரத்பவார்மறுத்துள்ளார். இது எதிர்தரப்பு செய்த சதி என்றும் தான் களத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பிகார் வீரர்கள் உண்ணாவிரதம்:

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து பிகாரைப் புறக்கணிப்பதாகக்கூறி பிகார் கிரிக்கெட்வீரர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், கிரிக்கெட் வாரியத்தின் பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு முன்புஉண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகிறார்கள்.

பிகாரைத் தொடர்ந்து புறக்கணித்தால் அடுத்த மாதம் 2ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு சாகும்வரைஉண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X