For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்சி தொடங்கிய கருணா!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்ட கருணா, தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்ற புதியஅரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

தலைமறைவாக இருந்த வண்ணம் செயல்பட்டு வருகிறார் கருணா. அவரது ஆதரவாளர்களுக்கும், புலிகளுக்கும்இடையே அவ்வப்போது மோதல் நடந்து வருகிறது. கருணாவுக்கு இலங்கை ராணுவம் உதவி வருவதாக புலிகள்குற்றம் சாட்டி வருகின்றனர்.

சமீபத்தில் கருணாவின் சகோதரரை புலிகள் சுட்டுக் கொன்றனர். இந் நிலையில் கருணா புதிய அரசியல் கட்சியைத்தொடங்கவுள்ளார்.

இது தொடர்பாக கருணாவின் சார்பில் க அவரது அமைப்பின் செயலாளர் ஞானராஜா சென்னையில் நிருபர்களிடம்பேசுகையில்,

விநாயகமூர்த்தி என்ற கருணா அம்மான் தலைமையில் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அரசியல் கட்சிதொடங்கப்பட்டுள்ளது.

தமிழர் விடுதலைப் போராட்டத்தை கருணா அம்மான் தலைமையில் தொடர்ந்து மேற்கொள்வதற்கு வசதியாக புதியகட்சி தொடங்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் பிடியிலிருந்து தமிழர்களை விடுவிப்பதே எங்கள் நோக்கம். இந் நிலையில் பிரபாகரனின்அரக்கத்தனத்திலிருந்து தமிழர்களை மீட்கும் கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதை உணர்ந்தே புதிய கட்சியை கருணாஅம்மான் தொடங்கியுள்ளார்.

விடுதலைப் போர் என்ற உயரிய நோக்கத்திலிருந்து விலகிய பிரபாகரன் அதை தீவிரவாத போராக மாற்றிவிட்டார் என்றார் ஞானராஜா.

கருணாவின் அறிக்கை:

இதற்கிடையே கருணா வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் பிரபாகரனை கடுமையாக சாடியுள்ளார்.இதுவரை இலங்கை கண்ட போர்கள் அனைத்தும் தமிழர்களை விடுவிப்பதற்காக நடத்தப்பட்டவை அல்ல, மாறாக,பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் வசதியாகவும், ஆடம்பரமாகவும், சுகமாகவும் வாழ்வதற்கு வசதியாகநடத்தப்பட்ட அடக்குமுறைகளே.

விடுதலைப் புலிகள் செய்த அனைத்துக் கொலைகளும் பிரபாகரனின் உத்தரவின்பேரில்தான் நிகழ்த்தப்பட்டன. 21ஆண்டுகளாக இந்த இயக்கத்தில் இருந்தவன் என்ற முறையில் நடந்த அத்தனை கொலைகளுக்கும் நான்மன்னிப்புக் கோரிக் கொள்கிறேன்.

தமிழர் விடுதலைக்காக நடந்த போரில் 18,000 விடுதலைப் புலிகளும், 80,000 தமிழ் மக்களும்கொல்லப்பட்டுள்ளனர். பிரபாகரனின் தான்தோன்றித்தனமான, அடக்குமுறை போக்கு தொடர்ந்தால் இந்தஎண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

பிரபாகரனைப் போன்ற குணங்களைக் கொண்ட தலைவரை யாருமே, எங்குமே பார்க்க முடியாது. அவரோடுசேர்ந்து போர் புரிந்தோமே என்று அவமானத்தால் நாங்கள் அனைவரும் தலை குனிந்து நிற்கிறோம். மாபெரும்அரசியல் தலைவர்களை, கல்வியாளர்களை, அப்பாவி மக்களைக் கொன்ற ஒருவரை எப்படி தலைவராக ஏற்கமுடியும்?

நான் ஏன் பிரபாகரனிடமிருந்து விலகினேன்? தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த1,000 தமிழ் இளைஞர்களை கேட்டார் பிரபாகரன். ஆனால் அவர்களது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைபிரபாகரனிடம் அனுப்ப மறுத்து விட்டனர். கருணாவுடன் மட்டுமே தங்களது பிள்ளைகள் இருக்க வேண்டும் என்றுதிட்டவட்டமாக கூறி விட்டனர்.

எனக்காக போரிடும் பிள்ளைகளின் பெற்றோர்கள் கூறுவதை நான் மீற முடியாது. எனவே பிரபாகரனின்கோரிக்கையை ஏற்க மறுத்தேன். இதனால் என் மீது கோபம் கொண்டார் பிரபாகரன். பெற்றோர்களின்உணர்வுகளைப் புரிந்து கொள்ள மறுத்தார். எனவேதான் பிரபாகரனின் தலைமைக்கு, உத்தரவுக்குக் கீழ் படியமறுத்தேன்.

இதேபோல ராஜீவ் காந்தியைக் கொலை செய்யும் திட்டத்தையும் தானே வகுத்தார் பிரபாகரன். இதுதொடர்பாகயாரிடமும் ஆலோசிக்கவில்லை. நாங்கள் எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்கு ஒரு பதிலை வைத்திருப்பார்.பிரபாகரனின் இந்தப் போக்கு காரணமாகவே இந்தியாவின் ஆதரவை ஈழத் தமிழர்கள் இழக்க வேண்டியதாயிற்று.

சுதந்திரத் தமிழ் ஈழம் அமைவது சாத்தியமில்லாதது. இதை பிரபாகரன் உணர்ந்து கொண்டதால்தான், இடைக்காலநிர்வாகத்தை அமைக்கலாம், அதை விடுதலைப் புலிகள் வசம் ஒப்படைக்கலாம் என்று கூறி இலங்கை அரசுடன்பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தார்.

இலங்கை அரசும், இந்திய அரசும் எனக்கு ஆதரவளிப்பதாக பிரபாகரன் கூறுவதில் உண்மை இல்லை. அதுஉண்மையாக இருந்தால், பிரேமதாசா முன்பு பிரபாகரன் மண்டியிட்டது போல நானும் மண்டியிட்டு வசதியாகஇருந்திருக்க மாட்டேனா?.

இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார் கருணா.

கடல் புலிகள் தலைவர் அதிருப்தி?:

இதற்கிடையே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், கடல் புலிகள் பிரிவுத் தலைவர் சூசைக்கும்இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக இலங்கையில் செய்திகள் பரவியுள்ளன.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சூசை சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பிரபாகரனுக்கு எதிராக பகிரங்கமாக பேசியதாகதகவல்கள் தெவிக்கின்றன.

ஆனால், இதை விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாக மறுத்துள்ளது. பிரபாகரனுக்கும், சூசைக்கும் இடையேஎந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், புலிகளுக்கு வேண்டாதவர்களும் இலங்கை அரசுமே இந்த பொய்ச்செய்திகளை பரப்பி வருவதாகவும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X