தமிழக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் அடுத்த மாதம் நடைபெறும் என சபாநாயகர் காளிமுத்துகூறியுள்ளார்.
ஈரோடு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர்அடுத்த மாதம் தொடங்கும்.
சட்டசபைக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் புதிய மசோதாக்கள், சட்ட திருத்த மசோதாக்கள் குறித்து இன்னும்தீர்மானிக்கப்படவில்லை.
சட்டசபைக் கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதும், கூடும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்என்றார்.
கடந்த சட்டசபைக் கூட்டத் தொடர் ஒரு வார காலமே நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபைக் கூட்டத்தொடரை திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் (பாஜக நீங்கலாக) ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனஎன்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications