For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.20,000 கோடி அழிவு: 15 லட்சம் மீனவர்களுக்கு பாதிப்பு?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சேது சமுத்திர திட்டத்தால் 15 லட்சம் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள், ரூ.20,000 கோடிக்கு அழிவு ஏற்படும் என்றுகடலோர செயல்பாட்டு கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

கடலோர செயல்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சுற்றுச்சூழல்விஞ்ஞானி அருணாசலம், மத்திய அரசின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் லால் மோகன், கடலோரசெயல்பாட்டு கூட்டமைப்பு அமைப்பாளர் ஜேசுரத்தினம், பாதுகாப்பான சுற்றுச் சூழலுக்கான மருத்துவர்கள்அமைப்பின் தலைவர் டாக்டர் ரமேஷ் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

சேதுசமுத்திர திட்டம் இயற்கை வளத்தையும், மீனவர்களின் வாழ்க்கையையும் பெருமளவில் பாதிக்கும். இந்ததிட்டத்தால் மன்னார் வளைகுடாவில் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும். கடல் பாசிகளும் (Coral reef) அழிந்துவிடும். இதனால், இதைச் சார்ந்து வாழும் 3,500 வகையான மீன் இனங்களும் அழிந்து விடும்.

இதன் காரணமாக 15 லட்சம் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள். சேது திட்டத்தால் பாதிக்கப்படும் மீனவர்களுக்குவேறு பகுதிகளில் மீன் பிடிக்க இடம் ஒதுக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் அவர்களுக்கு எங்கு,எப்போது இடம் ஒதுக்கப்படும் என்று கூறவில்லை.

மேலும் கடலில் கால்வாய் தோண்டும் இடம் இயற்கையாகவே புயல் காற்றும், மிகப் பெரும் கடல் அலைகளும்கொண்ட கொந்தளிப்பான பகுதியாகும். 1964ம் ஆண்டு ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடியே அழிந்து போனது.

தூத்துக்குடி துறைமுகம் உருவான பின்பு திருச்செந்தூர் கடல் விரிவடைந்தது. திருச்செந்தூரில் இப்போது கடல் நீர்முருகன் கோவிலுக்கு மிக அருகே வந்துவிட்டது. சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் திருச்செந்தூர் முருகன்கோவிலுக்குள்ளேயே நீர் புகும் ஆபத்து உள்ளது.

மேலும் கன்னியாகுமரியிலும் இதனால் கடல் அரிப்பு தொடங்கிவிடும். மேலும், சேது சமுத்திரம் தோண்டப்படும்இடத்தில் 2 கடலடி எரிமலை குன்றுகளும் உள்ளன. இதை மத்திய அரசு தனது அறிக்கையில் ஏன்குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை.

பாக் ஜலசந்தியில் உள்ள ஆதம் பாலத்தின் 2 புறமும் மணல் திட்டுகள் இயற்கையாகவே தோன்றி மறையும்.இவ்வாறு அதிகமான நீரோட்டமும், மணல் பரிமாற்றமும் உள்ள இடத்தில் ஒரு கால்வாயை தோண்டினால் அந்தகால்வாயை பராமரிப்பது மிகக் கடினமாகும். அடிக்கடி மணலை தூர் வார வேண்டி வரும்.

சேது சமுத்திர திட்டத்தால் ஆண்டுக்கு ரூ. 200 கோடி லாபம் வரும் என்று கூறுகிறார்கள். இது உண்மை அல்ல. இந்ததிட்டத்தால் ரூ.20,000 கோடி வரை அழியும்.

இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கும் முன்பு பொது விசாரணை நடத்தி இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்அனுமதியை பெற்றிருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று மத்தியஅரசு அறிவித்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X