அதிரடிப் படையினருக்கு பரிசா?: தடை கோரி வழக்கு
சென்னை:
தமிழக அதிரடிப்படை வீரர்களுக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாராட்டு விழாவுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வீரப்பனையும், கூட்டாளிகளையும் சுட்டுத் தள்ளிய தமிழக அதிரடிப்படையின் 752 பேரையும் பாராட்ட தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வருகிற 30ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் அதிரடிப்படையினருக்கு தலா ரூ. 3 லட்சம் பரிசு, வீட்டு மனை, பதவி உயர்வு போன்றவற்றுக்கானஉத்தரவுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கவுள்ளார்.
இந்த விழாவையொட்டி டான்ஸ் மாஸ்டர் கலா தலைமையில் நடன நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்தப் பாராட்டு விழாவுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தலித்கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில தலைவர் தம்பித்துரை என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், வீரப்பனை சுட்டு வீழ்த்திய அதிரடிப்படையினருக்கு ரூ. 22 கோடி மதிப்பில் பரிசுகள்அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பரிசுத் தொகையை அதிரடிப்படையினருக்குக் கொடுப்பதை விடஅதிரடிப்படையினரின் தேடுதல் வேட்டையின்போதும், அவர்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட மலை வாழ்மக்களுக்கு கொடுப்பதே சரியாக இருக்கும்.
எனவே சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாராட்டு விழாவுக்குத் தடை விதிக்க வேண்டும். பரிசுத்தொகையான ரூ. 22 கோடியை மலை வாழ் மக்களுக்கு கொடுக்க உத்தரவிட வேண்டும்.
அதேபோல, அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் மேற்கொள்ளவுள்ள பண்ணாரி முதல் சென்னை வரையிலானபாதயாத்திரைக்கும் தடை விதிக்க வேண்டும். ஒரு ஐபிஎஸ் அதிகாரி தனது மத அடையாளத்தைவெளிப்படையாகக் காட்டிக் கொள்வது சரியல்ல என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை அல்லது மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
நேரு விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தநிகழ்ச்சியில் பங்கேற்க அதிரடிப்படையினர் குடும்பத்தினரை அழைத்து வரும் பொறுப்பு அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் எஸ்.பிக்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
பரிசு கேட்கும் வனத்துறையினர்:
இந் நிலையில் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் அதிரடிப்படையினருக்கு உற்ற துணையாக இருந்த தங்களுக்கும்பரிசு, வீட்டுமனை போன்றவற்றை வழங்க வேண்டும் என வனத்துறையினரும் கோரிக்கை விடுக்கஆரம்பித்துள்ளனர்.
வீரப்பானால் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் தான் என்கின்றனர் இவர்கள்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications