புதுவையை சிங்கப்பூராக மாற்ற முடியும்: கலாம்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

Kalamசிங்கப்பூர் போல பாண்டிச்சேரியையும் மேம்படுத்த அரசியல் தைரியம் தேவை என்று குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறினார். இதற்காக 10 அம்சத் திட்டம் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.

பிரான்ஸ் ஆதிக்கத்திலிருந்து புதுவை விடுபட்டதன் 50வது ஆண்டு பொன்விழாவையொட்டி புதுவை பிரதேசசட்டசபையின் சிறப்புக் கூட்டம் நடந்தது. அதில் குடியரசுத் தலைவர் கலாம் உரையாற்றினார்.

புதுவையின் வளர்ச்சிக்காக அவர் பல ஆலோசனைகளை வழங்கினார். 10 அம்சத் திட்டம் ஒன்றையும் முன்வைத்தார். கலாமின் பேச்சு விவரம்:

புதுவையின் வளர்ச்சியை சிறிய அளவில் திட்டமிடக் கூடாது. அப்படிச் செய்தால் அது குற்றச் செயலாகும். மிகப்பெரிய அளவில் புதுவை வளர்ச்சிக்காக திட்டமிட வேண்டும். அப்போதுதான் சிங்கப்பூர் போல மிக வளர்ச்சிஅடைந்த மாநிலமாக புதுவை உருவாக முடியும்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 100 சதவீத கல்வியறிவு கட்டாயம் தேவை. எனவே 2009ம் ஆண்டுக்குள்புதுவையில் 100 சதவீத கல்வியறிவை எட்டும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

இதற்காக 20,000 கல்லூரி மாணவர்களையும், 80,000 பள்ளி மாணவர்களையும் கல்வியறிவு திட்டத்தின் கீழ்பயன்படுத்தி 1.8 லட்சம் மக்களுக்கு கல்வியறிவைப் புகட்ட வேண்டும்.

போதனை முறையிலும் கடலளவு மாற்றங்களை நாம் செய்ய வேண்டியுள்ளது. ஆசிரியர்களின் போதிக்கும்முறையில் சமூக விழிப்புணர்வும், மாணவர்களிடையே தன்னம்பிக்கை வளரும் வகையிலும் இருக்க வேண்டும்.வேலைக்காக படிப்பு என்ற நிலை மாறி, வேலைகளை உருவாக்கும் திறமையுடன் கூடியவர்களாக மாணவர்கள்வளர வேண்டும்.

புதுவையில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், சுகாதார வசதி செய்து தரப்பட வேண்டும். இதற்காகஒவ்வொருவரும் மாதம் ரூ. 5 கொடுக்க வேண்டும். அதேபோல, அரசும் ரூ. 5 போட வேண்டும். இப்படியாகவருடத்திற்கு ரூ. 12 கோடி நிதியை சுகாதாரத் திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும்.

இதன் மூலம் குடிமக்கள் அனைவருக்கும் சிறந்த சுகாதார வசதியை செய்து தர முடியும்.

அடுத்து, ஊரகப் பகுதிகளில் நகர்ப்புற வசதிகளை தருவது. அதாவது கிராமங்களில், நகர்ப்புறங்களில் கிடைக்கக்கூடிய அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும். சிறிய மாநிலமான புதுவையில் இதெல்லாம்சாத்தியமான விஷயங்கள் தான்.

இதேபோல, புதுவையில் உள்ள தரிசு நிலங்களில் ஜட்ரோபா பயிடலாம். மொத்தம் 15,000 ஹெக்டேர் நிலத்தில்ஜட்ரோபா பயிட்டு அதன் மூலம் பயோ-டீசல் தயாரிக்கலாம். இதன் மூலம் 21,000 பேருக்கு வேலை வாய்ப்புகிடைக்கும். மாநிலத்தின் எரிபொருள் தேவையும் பூர்த்தியாகும்.

சுற்றுலாவை வைத்தும் புதுவைய பிரமாதப்படுத்தலாம். அழகிய சுற்றுலா தளமாக புதுவையை உருவாக்கலாம்.

புதுவையில் 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையே உள்ளது. சிறிய மாநிலமாகவும் உள்ளது, வருவாயும்நன்றாக உள்ளது, குடிநீர்ப் பிரச்சினையும் பெரிய அளவில் இல்லை, வசதிகள் உள்ளன, கல்வியறிவும்முன்னணியில் உள்ளது, இதனால் புதுவையை சிங்கப்பூர் போல அனைத்து வசதிகளும் கொண்ட மாநிலமாக மாற்றஎந்தப் பிரச்சினையும் இல்லை.

அதற்குத் தேவை அரசியல் துணிச்சலும், மக்களின் ஒத்துழைப்பும் மட்டுமே என்றார் கலாம்.

ன்னதாக புதுவை மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களைவழங்கினார் கலாம்.

தனது புதுவை பயணம் மிகவும் திருப்தியாகவும், சந்தோஷமாகவும் இருந்ததாரக பின்னர் நிருபர்களிடம் கலாம்மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...