இரவு 10 மணிக்கு மேல் வெடி போட்டால் தண்டனை
சென்னை:
சென்னை நகரில் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
இது போன்ற தடையை சமீப காலமாக வருடந்தோறும் போலீசார் விதித்து வருகின்றனர். ஆனால், அதை யாரும்கண்டுகொள்ளவது இல்லை. தடையை மீறி இரவு முழுவதும் வெடிச் சத்தம் கிளப்புபவர்களை போலீசாரும் கண்டுகொள்வதில்லை.
இந் நிலையில் வழக்கம்போல் சென்னை போலீஸ் கமிஷ்னர் நட்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கத் தடை செய்யப்படுகிறது. மேலும் அதிகஓசையைக் கிளப்பும் ஆட்டம் பாம் போன்ற வெடிகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்படுகிறது.
குறைந்த ஓசை எழுப்பும் பட்டாசுகளைத் தான் வெடிக்க வேண்டும். 125 டெசிபலுக்கு மேல் ஓசை எழுப்பும் எந்த பட்டாசையும்வெடிக்கக் கூடாது. இதை மீறி அதிக சப்தம் கொண்ட பட்டாசு தயாரிப்போர், விற்போர், அதை வெடிப்போர் மீது நடவடிக்கைஎடுக்கப்படும்.
மருத்துவமனைகள், முதியோர் இல்லங்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. துணிக் கடைகளுக்குஅருகிலும் பட்டாசு வெடிக்கக் கூடாது.
குடிசைகள், ஓலைக் கொட்டகைகள், பட்டாசு கிடங்குகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றின் அருகே பட்டாசுகளை வெடிக்கவேண்டாம். குறிப்பாக ராக்கெட் வெடிகளை வெடிக்கும்போது அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெரியவர்களின் கண்காணிப்பில் தான் வெடிகளை சிறுவர்கள் வெடிக்க வேண்டும்.
வெடியின் மீது தகர டப்பாவை வைத்து வெடிப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது.
வெடிகளை அடுப்பின் அருகே காய வைப்பது, விளக்குகளின் வெளிச்சத்தில் உலர்த்துவது போன்ற ஆபத்தான வேலைகளைகைவிட வேண்டும்.
ஒருவர் பட்டாசு வெடிப்பதால் தனக்கு தொல்லை ஏற்படுவதாக யாராவது புகார் தந்தால் அதன் மீது நிச்சயம் நடவடிக்கைஎடுப்போம் என்றார் நட்ராஜ்.
கமிஷ்னர் நட்ராஜ் சொன்னதைக் கேட்கையில் மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால், இதை அமல்படுத்த வேண்டிய போலீசார்தீபாவளியையொட்டி ஸ்பெஷல் மாமூல் வேலைகளில் தீவிரமாகிவிடுவதால், இந்தக் கட்டுப்பாடுகள் பெரும்பாலும் பதத்துப்போன பட்டாசுகளாகவே மாறிவிடுகின்றன.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications