For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக அரசுக்கு கன்னட துறவிகள் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

கொலை வழக்கில் ஜெயேந்திரர் நடத்தப்பட்ட விதம் குறித்து கர்நாடக துறவிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கர்நாடக ஆச்சார்யா சபா கூட்டத்தில் கலந்து கொண்ட துறவிகள் நிருபர்களிடம் ஜெயேந்திரர் கைது குறித்து தங்களதுகண்டனத்தை தெரிவித்தனர்.

தரளபாலு மடாதிபதியும், லிங்காயத்து சமூகத்தின் மூத்த தலைவருமான சிவமூர்த்தி சிவச்சார்கா கூறியதாவது:

துறவிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. நாங்கள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய குடிமக்கள்தான். ஆனால்சங்கராச்சாரியார் போன்ற, மதத்தின் உயர்ந்த தலைவரை அவரது மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில், நீண்ட காலகுற்றவாளியைப் போல் நடத்துவது கண்டனத்திற்கு உரியது.

இது எங்களுக்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. நாங்கள் ஜெயேந்திரர் கைதை எதிர்க்கவில்லை. ஆனால் அவர் நடத்தப்பட்டவிதம் தவறானது. நாளை அவர் நிரபராதி என்று நீதிமன்றம் அறிவிக்குமேயானால். அப்போது அவருக்கு ஏற்பட்ட களங்கத்தையார் சரி செய்வார்கள்?

அவர் குற்றம் சுமத்தப்பட்டவராகவே இருக்கிறார். குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். அதுவரைஅவரை வீட்டுக்காவலில் வைத்திருக்க வேண்டும். அவர் குற்றவாளி என்று முடிவாகும் வரை அவருக்கு உரிய மரியாதைகள்வழங்கப்பட வேண்டும் என்றார்.

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் கூறுகையில், சட்டம் தன் கடமையை ஆற்றும். இருப்பினும் இந்த விவகாரத்தைஅரசு கையாண்ட விதம் வருத்தமளிப்பதாக உள்ளது. இதை நிதானமாக கையாண்டிருக்கலாம் என்றார்.

உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வேஷ தீர்த்த சுவாமிகள் கூறுகையில், ஜெயேந்திரரின் அந்தஸ்தைக் கருத்தில் கொண்டுஅவருக்கு உரிய மரியாதையை வழங்கியிருக்க வேண்டும். அவருக்கு ஜாமீன் வழங்கப்படுவதை அரசியல் நோக்கத்துடன்எதிர்க்கக் கூடாது என்றார்.

அடிச்சுன்சானகிரி மடாதிபதி பாலகங்காதரநாத் சுவாமிகள் பேசுகையில், இந்தக் கைது நடவடிக்கை எங்களை பெரிதும்பாதித்துள்ளது. இதுபோல் எவருக்கும் நேரக்கூடாது என்றார்.

சுத்தூர் லிங்காயத்து மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திரா மகாசுவாமிகள் கூறுகையில்,

ஜெயேந்திரர் கைதை நாங்கள் தவறு என்று கூறாவிட்டாலும், அவருக்கு குறைந்தபட்ச மரியாதைகளோ, வசதிகளோஅளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

இந்தக் கூட்டத்தில் சிருங்கேரி மடாதிபதி, ஓம்காரி மலை சிவபுரி சுவாமிகள், ஹைதராபாத்தின் புஷ்பகிரி சுவாமிகள், ரிஷிகேஷ்தயானந்த சரஸ்வதி சுவாமிகள் மற்றும் கங்கதரேந்திர ஸ்வர்ணவல்லி மகாசமஸ்தானம், அவனி சிருங்கேரி மடத்து பிரதிநிதிகளும்கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X