For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிராவில் முடிந்த இந்தியா- தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்

By Staff
Google Oneindia Tamil News

கான்பூர்:

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கான்பூரில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்வு செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 510 ரன் குவித்தது.அந்த அணியின் ஆண்ட்ரூ ஹால் அபாரமாக விளையாடி 163 ரன்களை எடுத்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா, 4-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் எடுத்து இருந்தது.ஷேவாக் அற்புதமாக ஆடி 164 ரன்ககளை 24 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் எடுத்தார்.

இன்று 5-வது நாள் ஆட்டத்தை டிராவிட்டும், லட்சுமணும் தொடங்கினார்கள். ஆனால் தென் ஆப்பிரிக்க வீரர்களின் பந்துவீச்சில்இந்திய விக்கெட்கள் மளமளவென சரிந்தன. உணவு இடை வேளைக்கு முன்னதாகவே இந்திய அணி 466 ரன்னுக்கு ஆல் அவுட்ஆனது.

44 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சை ஆடத் தொடங்கியது. ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.

ஆட்டநாயகன் விருது 163 ரன்களையும் 3 விக்கெட்களையும் வீழ்த்திய ஆன்ட்ரு ஹாலுக்கு வழங்கப்பட்டது.

இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 28ம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது.

தரவரிசை: கும்ப்ளே முதலிடம்:

டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தர வரிசைப் பட்டியலில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் கும்ப்ளே முதலிடத்தைப்பிடித்துள்ளார். பேட்டிங்கில் ஷேவாக் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் 190 புள்ளிகள் பெற்று அனில் கும்ப்ளே முதலிடத்தில் உள் ளார்.ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் சிறப்பாக பந்து வீசியதால் கும்ப்ளேவிற்குமுதலிடம் கிடைத்துள்ளது.

இங்கிலாந்தின் ஸ்டீபன் ஹர்மிசன் 2-வது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர் வார்னே 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

டெஸ்ட் போட்டி பேட்டிங்கில் மேற்கு இந்தியத் தீவுகளின் லாரா முதலிடத்திலும், இலங்கை வீரர்கள் ஜெயசூர்யா, சங்கக்கரா 2வதுமற்றும் 3வது இடத்திலும், இந்திய வீரர் ஷேவாக் 4-வது இடத்திலும் உள்ளனர்.

ஒரு நாள் போட்டி பந்து வீச்சில் இலங்கை வீரர் வாஸ் முதலிடத்திலும், இந்திய வீரர் இர்பான் பதான் 2-வது இடத்திலும்,ஆஸ்திரேலிய வீரர் காஸ்பரோவிச் 3-வது இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் போட்டி பேட்டிங்கில் ஆஸ்திரேலிய வீரர் சைமண்டஸ் முதலிடத்திலும், இங்கிலாந்தின் பிளின்டாப் இரண்டாவதுஇடத்திலும், பாகிஸ்தானின் இன்சமாம் 3வது இடத்திலும், இந்தியாவின் சச்சின் 4வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய அணி டெஸ்ட் போட்டியில் 6-வது இடத்தையும், ஒருநாள் போட்டியில் 7-வது இடத்தையும் பிடித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X