வட சென்னையில் தீவிரமடையும் காலரா!
சென்னை:
சென்னை மாநகரின் வட பகுதியில் காலரா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.
சமீபத்தில் பெய்த கன மழையைத் தொடர்ந்து காலரா பரவி வருகிறது.
இதனால் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள்வந்த வண்ணம் உள்ளனர். இதுவரை மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காலராவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுள்ளனர்.
வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, பாடி, திருவொற்றியூர், போரூர், நெற்குன்றம், கொரட்டூர்ஆகிய பகுதிகளில்தான் அதிக அளவில் காலரா பரவியுள்ளது.
அதிகரிக்கும் காலரா நோயாளிகளால் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் இடமின்மைப் பிரச்சினைஏற்பட்டுள்ளது.
சென்னை தவிர செங்கல்பட்டு, அரக்கோணம் ஆகிய வெளியூர்களிலிருந்தும் ஏராளமான காலரா நோயாளிகள்இங்கு வந்தவண்ணம் இருப்பதால் தண்டையார்பேட்டை மருத்துவனை நோயாளிகள் கூட்டத்தால் திணறிவருகிறது.
காலராவுக்கு இதுவரை ஒரு பெண் பலியாகியுள்ளார். தமிழக சுகாதாரத்துறை முறையான முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதே காலரா பாதிப்பு அதிகரித்ததற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications