For Daily Alerts
Just In
சிறையில் ஜெயேந்திரரிடம் நீதிபதி குறைகேட்பு
வேலூர்:
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயேந்திரரை வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மாலா சந்தித்துகுறை கேட்டார்.
வேலூர் மத்தியச் சிறையில் உள்ள 2,000 கைதிகளிடம் மாதம் இருமுறை மாவட்ட நீதிபதி சந்தித்து குறைகளைக் கேட்பது வழக்கம்.
அந்த வகையில், நீதிபதி மாலாவும், தலைமை குற்றவியல் நீதிபதி ராஜகோபால் ஆகியோர் சிறைக்கு சென்று கைதிகளிடம் குறை கேட்டனர்.
அப்போது ஜெயேந்திரரையும் சந்தித்து குறை கேட்டனர். அவர் தனக்கு எந்தக் குறையும் இல்லை என்று கூறினார்.


