இந்திய- இலங்கை கடலோர காவல் படை கூட்டு பயிற்சி
கொழும்பு:
இந்தியா, இலங்கை கடலோர காவல் படைகள் இன்று கூட்டுப் பயிற்சி மேற்கொண்டன.
கொழும்பு கடற்கரையில் நடந்த இந்த முதல் கூட்டுப் பயிற்சியை இலங்கை பாதுகாப்பு அமைச்சர், இரு நாடுகளின் கடலோர காவல் படைதலைவர்கள் பார்வையிட்டனர்.
இதில் இந்திய கடலோர காவல் படை சார்பில் சாரங் மற்றும் துர்காபாய் தேஷ்முக் ஆகிய கப்பல்களும், ஒரு ஹெலிகாப்டர், ஒரு விமானம்மற்றும் 200 வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியைப் பார்வையிட வைஸ் அட்மிரல் ஏ.கே.சிங் கொழும்பு சென்றார்.
இலங்கை கடற்படையின் சார்பில் 3 கப்பல்கள், இரண்டு விமானங்களுடன் 450 வீரர்கள் கலந்து கொண்டனர்.
கடத்தல் தடுப்பு, விபத்து மீட்பு, மாசுக் கட்டுப்பாடு, தேடுதல் வேட்டை ஆகிய கூட்டுப் பயிற்சிகள் நடத்தப்பட்டது. பின்னர் இலங்கைஅதிகாரிகளுடன் இந்திய கடலோர காவல் படையைச் சேர்ந்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
முதலில் இந்த கூட்டுப் பயிற்சிக்கு பத்திரிக்கையாளர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. கடைசி நேரத்தில் உள்ளூர்பத்திரிக்கையாளர்கள் சிலர் மட்டும் கப்பல் மூலமாக பயிற்சி நடந்த இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த பயிற்சி தவிர, கடல் சார்ந்த சட்ட அமலாக்க அதிகாரிகளுடனான கலந்துரையாடலிலும் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள்கலந்து கொள்கின்றனர்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications