For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உதவி கரம் நீட்டுங்கள்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

Rescue operationகடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் பிரதமர் மற்றும் முதல்வரின் பொது நிவாரணநிதிக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்பி வைக்கலாம்.

ஸ்டேட் பாங்க், சென்டிரல் பேங்க், யூனியன் பேங்க், தேனா பேங்க், சிண்டிகேட் பேங்க், கார்ப்பரேஷன் பேங்க், பேங்க் ஆப் இந்தியா,இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், இந்தியன் பேங்க், அலஹாபாத் பேங்க் மற்றும் சிட்டி பேங்க் ஆகியவற்றில் தங்களதுபணத்தை நேரடியாகவே செலுத்தலாம்.

அல்லது தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கோ, பிரதமரின் நிவாரண நிதிக்கோ அனுப்பலாம்.

முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்ப:

தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்ப விரும்புவர்கள், CHIEF MINISTERS PUBLIC RELIEF FUND என்றபெயருக்கு செக், டி.டி எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.

The Joint Secretary to Government and Treasurer,

Chief Ministers Public Relief Fund,

Finance Department,

Secretariat,

Chennai-600 009.

இந்த முகவரிக்கு மணியார்டரும் அனுப்பலாம்.

பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்ப:

பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்ப விரும்புவோர்,

Prime Ministers National Relief Fund என்ற பெயருக்கு காசோலையோ (cheque), வரைவோலையோ (Demand draft) எடுத்து,

Prime Ministers Office,

South Block,

New Delhi-110001

Bodies lying in hospitalஎன்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இவ்வாறு பணம் அனுப்ப வங்கிகளுக்கு எந்த கமிஷன் தொகையும் செலுத்த வேண்டியதில்லை. அதேபோல் எந்தக் கமிஷனும் இன்றிமணியார்டர் மூலமாகவும் அனுப்பலாம். இவ்வாறு அளிக்கப்படும் பணத்திற்கு 100 சதவீத வரி விலக்கு உண்டு.

நாளை மன்மோகன் சிங் வருகை:

இந் நிலையில் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம், ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் நாளை பிரதமர் மன்மோகன் சிங்நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார்.

தமிழகம், ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் அந்தமானில் கடல் கொந்தளிப்பில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கபிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நாளை தமிழகம் வருவார் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X